Idhayam Matrimony

வெள்ளிக்கிழமை தொழுகைக்கான 2 மணி நேர இடைவேளை ரத்து : அசாம் முதல்வர் விளக்கம்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      இந்தியா
Hemantha-Biswa-Sharma 2023

Source: provided

திஸ்பூர் : அசாம் சட்டசபையில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான 2 மணி நேர இடைவேளை ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்ததற்கு அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 1937-ம் ஆண்டு அசாமில் காலணித்துவ ஆட்சிக் காலத்தின்போது, முஸ்லிம் லீக் அரசாங்கத்தின்கீழ் மாநில சட்டசபையில் வெள்ளிக் கிழமை  தொழுகைக்காக 2 மணி நேரம் இடைவேளை விடும் வழக்கம் கொண்டு வரப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த இந்த வழக்கமானது தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

இதன்படி அசாம் சட்டசபையில் வெள்ளிக் கிழமை தொழுகைக்கான 2 மணி நேர இடைவேளை ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் பிஸ்வஜித் அறிவித்தார். வெள்ளிக் கிழமைகளில் 2 மணி நேரம் இடைவேளை விடப்படுவதால், முக்கிய விவாதங்களை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், அதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தொழுகைக்கான இடைவேளை நேரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அசாம் மாநில அரசின் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்கள் தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

அசாம் சட்டசபையில் உள்ள இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக அமர்ந்து 2 மணி நேர இடைவேளையை ரத்து செய்வது என ஒருமனதாக தீர்மானித்தோம். அந்த இடைவேளை நேரத்தில் நாம் இன்னும் உழைக்க வேண்டும். 

1937-ல் தொடங்கிய இந்த நடைமுறை நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒருமித்த முடிவு. இது என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல என்று தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து