எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த சென்னை எழும்பூர்- நாகர்கோவில், மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் தொடக்கி வைத்தார். நேற்று தொடங்கி வைக்கப்பட்ட ரயில் சேவைகள் செப். 2 முதல் வழக்கமான சேவையைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை சென்னை சென்ட்ரல் - மைசூரு, சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, எழும்பூர் - திருநெல்வேலி, கோவை - பெங்களூரு என மொத்தம் 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சேவையுடன் புதிதாக இரண்டு ரயில் சேவைகள் இணைந்துள்ளன.
தமிழகத்தின் கோயில் நகரமான மதுரையிலிருந்து, கர்நாடகத்தின் தொழில் நகரமான பெங்களூருவை இணைக்கும் வகையில் ஒரு வந்தே பாரத் இயக்கப்படுகிறது. இதனுடன் எழும்பூர்- நாகர்கோவில் இடையே என இரண்டு ரயில்களுக்கான கால அட்டவணையும் இந்திய ரயில்வேயால் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக இரண்டு வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி, மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் எல். முருகன், முன்னாள் தெலங்கானா மற்றும் புதுச்சேரி முன்னாள் துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ரயில் தொடக்க நாளில் மட்டுமே சென்ட்ரலிலிருந்து இயக்கப்படும். மற்ற நாள்களில் எழும்பூரிலிருந்து இயக்கப்படும்.
மதுரையிலிருந்து மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் வீ.சோமண்ணா மதுரை - பெங்களூரு இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலை தொடக்கவிழாவில் பங்கேற்றார். இந்த ரயில்கள் சனிக்கிழமை தொடங்கப்பட்டாலும் செப். 2 -ஆம் தேதிமுதல்தான் வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும். இதற்காக முன்பதிவுகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
எழும்பூரிலிருந்து நாகர்கோவில் செல்ல இருக்கை வசதி கொண்ட குளிர்சாதனப் பெட்டியில் பயணிக்க (ஏசி சேர் கார்) நபர் ஒருவருக்கு ரூ.1,760, சொகுசு பெட்டியில் பயணிக்க (எக்ஸிகியூட்டிவ் சேர் கார்) நபர் ஒருவருக்கு ரூ.3,240 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக ஏசி சேர் கார் இருக்கைக்கு ரூ.1,735, எக்ஸிகியூட்டிவ் சேர் கார் இருக்கைக்கு ரூ.3,220 கட்டணம் நிர்ணயக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து பெங்களூரு செல்ல ஏசி சேர் கார் இருக்கைக்கு ரூ.1,575, சொகுசு பெட்டி இருக்கைக்கு ரூ.2,865 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக ஏசி சேர் கார் இருக்கைக்கு ரூ.1,740, சொகுசு பெட்டி இருக்கைக்கு ரூ.3,060 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தில் உணவு மற்றும் சிற்றுண்டிக்கான கட்டணங்களும் உள்ளடங்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |