முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.பி.ஏ., பி.சி.ஏ. படிப்புகளுக்கான அங்கீகாரம் பெற கல்லூரிகள் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் : ஏ.ஐ.சி.டி.இ. அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024      தமிழகம்
Student 2023-05-25

Source: provided

சென்னை : பி.பி.ஏ., பி.சி.ஏ. படிப்புகளுக்கான அங்கீகாரம் பெற கல்லூரிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று ஏ.ஐ.சி.டி.இ. அறிவித்துள்ளது.

இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின்  உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

நடப்பு கல்வியாண்டுக்கான (2024 - 25) பி.பி.ஏ., பி.எம்.எஸ், பி.சி.ஏ. படிப்புகளை வழங்கும் உயர் கல்விநிறுவனங்கள் ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி பெறும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதி பெற்றால் மட்டுமே ஏ.ஐ.சி.டி.இ.யின் திட்டங்கள் மற்றும் அதன் பலன்களைப் பெற முடியும். இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் தொடங்கி ஜூலை மாதம் வரை நடைபெற்றது. ஏராளமான கல்லூரிகள் பதிவு செய்து அனுமதியை பெற்றுக் கொண்டன.

இந்நிலையில் பி.பி.ஏ., பி.சி.ஏ .படிப்புகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு கல்லூரிகள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டு வருகின்றன. அதை ஏற்று கல்லூரிகள் பி.பி.ஏ., பி.சி.ஏ. படிப்புகளுக்கு அனுமதி பெறுவதற்கான இணையதள விண்ணப்பப் பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து விருப்பமுள்ள கல்லூரிகள் www.aicte.india.org என்ற இணையதளம் வழியாக வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த முறை விண்ணப்பிக்கும் போது தாமதக் கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை உயர்கல்வி நிறுவனங்கள் மேற்கண்ட வலைத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து