எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் நேற்று நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு, மாநில நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைப் பொறுப்பை கமல்ஹாசன் மீண்டும் ஏற்று, இந்த இயக்கத்தை வழிநடத்த வேண்டும். கட்சியை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் அடுத்தாண்டு ஜூன் 25-ம் தேதிக்குள் குறைந்தது 5,000 புதிய உறுப்பினர்களைச் சேர்க்க உறுப்பினர்ச் சேர்க்கை முகாம்களை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு, தலா ஒரு பூத்துக்கு குறைந்த பட்சம் 5 பேர் நியமிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மநீம ஒரு குழுவை உருவாக்கி விரிவான ஆய்வுகள் செய்து அதன் அறிக்கையை, பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு சமர்ப்பிப்பதோடு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை எடுக்க அழுத்தம் கொடுக்கும்.
போதைப்பொருட்களுக்கு எதிராக தமிழக அரசும், காவல்துறையும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ம.நீ.ம. பொதுக்குழு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. மத்திய அரசு சாதி வாரியான கணக்கெடுப்பை இந்தியா முழுவதிலும் உடனடியாக துவங்க வேண்டும். தமிழகத்துக்கு உரிய நிதிப்பகிர்வை அரசியலாக்கி, விவாதப்பொருளாக்கி தமிழக மக்களைத் தண்டிக்கும் போக்கை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தவாறு, சராசரி உற்பத்திச் செலவுடன், 50 சதவீத லாபத்தை அளிக்கும் வகையில் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உடனடியாக மத்திய அரசு சட்டப்பூர்வமாக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நிகழ்த்தும் கொடூர தாக்குதல்களையும், அத்துமீறல்களையும் மநீம வன்மையாகக் கண்டிக்கிறது. ஏற்கனவே சிறைபட்டிருக்கும் தமிழக மீனவர்களையும், அவர்களது உடைமைகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதற்கேற்றபடி இரு நாடுகளிடையே புதிய ஒப்பந்தங்களை மத்திய அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும். பங்கேற்பு ஜனநாயகத்தை உறுதி செய்யும் கிராம சபை, ஏரியா சபை ஆகியவற்றை மேலும் வலிமைப்படுத்த வேண்டும்.
மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை உருவாக்குவது, தங்களது மாநிலங்களின் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.
பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்க்கும் சூழலில், ஒருமித்த கருத்தின்றி மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கக் கூடாது.
ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. ஜனநாயகத்தை மண் கொண்டு புதைக்கும் செயல். ஒரே நாடு ஒரே தேர்தல். அழகான மாளிகையை சிதைத்து விட்டு குட்டிச் சுவரைக் கட்டிப்பார்க்கும் முட்டாள்தனமான முடிவுதான் இது. மத்திய அரசின் இந்த முடிவை ம.நீ.ம. வன்மையாக கண்டிக்கிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21-ஆக குறைக்க மத்திய அரசு உரிய சட்டதிருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
அரசின் நலத்திட்டங்கள் நலிவடைந்த மக்களை நேரடியாகச் சென்று அடையும்படி அனைவருக்குமான அடிப்படை வருமான அட்டை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
தமிழகம் நோக்கி நகரும் புயல் சின்னம்: அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
12 Nov 2024சென்னை, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று மதியம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியிருந்த நிலையில் அது தமிழகத்தை நோக்கி நகர
-
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
12 Nov 2024சென்னை : தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
12 Nov 2024சென்னை : சென்னையில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த அவசரகால கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்
-
பெண்களின் திருமண வயதை 9-ஆக குறைக்கும் சட்டத் திருத்தம் : ஈராக்கில் விரைவில் அமல்படுத்த முடிவு
12 Nov 2024பாக்தாத் : பெண்களின் திருமண வயதை ஒன்பதாக குறைக்கும் சட்டத்திருத்தம் ஈராக்கில் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல்
12 Nov 2024கொழும்பு : இலங்கை நாடாளுமன்றத்தின் 225 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாளை 14-ம் தேதி நடைபெற உள்ளது.
-
கபட நாடகம் ஆடுவதில் பி.எச்டி பட்டம் பெற்ற ஆட்சியாளர்கள் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
12 Nov 2024சென்னை : கபட நாடகம் ஆடுவதில் பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் தி.மு.க. ஆட்சியாளர்கள் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
-
மொரீஷியஸ் நாட்டின் புதிய பிரதமராகிறார் நவீன் ராம்கூலம்
12 Nov 2024போர்ட் லூயிஸ் : மொரீஷியஸ் நாட்டின் புதிய பிரதமராக டாக்டர் நவீன் ராம்கூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
தி.மு.க. ஆட்சியை கண்டு சிலர் வயிறு எரிகிறார்கள் : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
12 Nov 2024சென்னை : திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாட்களேயாகும்.
-
தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைத்தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்பு
12 Nov 2024சென்னை, தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
-
தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
12 Nov 2024நாகை : தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
12 Nov 2024சென்னை, கனமழை எச்சரிக்கையையடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அர
-
டாஸ்மாக் தரப்பை கேட்காமல் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு : சுற்றறிக்கையை எதிர்த்த வழக்கில் உத்தரவு
12 Nov 2024சென்னை : மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் மட்டுமல்லாமல் அனைத்து பணியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்வது தொடர்பான டாஸ்மாக்கின் சுற்றற
-
மலையாள நடிகர் சித்திக்கின் இடைக்கால முன்ஜாமின் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு
12 Nov 2024புதுடெல்லி : பிரபல மலையாள நடிகர் சித்திக்கின் இடைக்கால முன்ஜாமினை ஒரு வாரத்துக்கு நீட்டித்து சுப்ரீம் கோ்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு
12 Nov 2024காசா சிட்டி : காசா முனை கான் யூனிஸ், நசிரத் அகதிகள் முகாம் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர்.
-
தங்கம் விலை ரூ. 1,080 குறைந்தது
12 Nov 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக நேற்று (நவ. 12) சவரனுக்கு ரூ. 1,080 குறைந்து விற்பனையானது.
-
ஜப்பான் பிரதமராக ஷெகெரு இஷிபா மீண்டும் தேர்வு
12 Nov 2024டோக்கியோ : ஜப்பான் பிரதமராக ஷிகெரு இஷிபா மீண்டும் தேர்வாகி உள்ளார்.
-
கங்குவா சிறப்புக்காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
12 Nov 2024சென்னை : கங்குவா திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைத்தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்பு
12 Nov 2024சென்னை : தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
-
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸ்: டிரம்ப்
12 Nov 2024புளோரிடா : அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமிக்க டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
டிச.31 மற்றும் ஜன.1-ல் குமரியில் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
12 Nov 2024சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி வரும் டிசம்பர் 31-ம் தேதி மற்றும் ஜனவரி 1-ம் தே
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணியின் போட்டிகளை துபாயில் நடத்த ஐ.சி.சி. திட்டம்
12 Nov 2024துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பி.சி.சி.ஐ., சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்திருந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி கி
-
ஜார்க்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு: மாவோயிஸ்டு ஆதிக்க பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் : மாநில தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
12 Nov 2024ராஞ்சி : ஜார்க்கண்டில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
ஆதார் - பான் கார்டு இணைப்புக்கு டிச.31-வரை மத்திய அரசு கெடு
12 Nov 2024புதுடெல்லி : ஆதார் கார்டை பான் அட்டையுடன் இதுவரை இணைக்காதவர்கள், வரும் டிசம்பர் 31-க்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய கெடுவை விதித்துள்ளது.
-
பொதுக்கூட்டத்தில் பங்கேற்காததால் மகராஷ்டிரா மக்களிடம் மன்னிப்பு கோரிய ராகுல்
12 Nov 2024மும்பை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இயலாததால் மகாராஷ்டிர மக்களிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டு செவ்வாய்க்கிழமை காணொலி வெளியிட்டுள்ள
-
தெலுங்கர்கள் குறித்து சர்ச்சை கருத்து: நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் வழங்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
12 Nov 2024மதுரை : ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான நட்புறவை கெடுக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு, தெலுங்கு பேசும் பெண்களை நடிகை கஸ்தூரி அவதூறாக