முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்னும் 5 விக்கெட்டுகள்தான்: டி-20 போட்டிகளில் 2 சாதனைகளை படைக்கிறார் ஹர்த்திக் பாண்ட்யா

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024      விளையாட்டு
Hardik-Pandya 2023 08 02

Source: provided

புதுடெல்லி : இன்னும் 5 விக்கெட்டுகள் எடுத்தால் டி20 போட்டிகளில் 2 வரலாறு சாதனைகளை படைக்க பாண்ட்யாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாளை வங்கதேசத்திற்கு எதிராக தொடங்கும் டி-20 தொடரில் அந்த சாதனைகளை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுப்பயணம்... 

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நாளை (6ம் தேதி) தொடங்குகிறது.

சூர்யகுமார் யாதவ்...

இந்த தொடருக்கான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 2 மாபெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது.

4வது இடத்திலும்...

அதாவது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் (96 விக்கெட்) முதலிடத்திலும், புவனேஷ்வர் குமார் (90 விக்கெட்) 2ம் இடத்திலும், ஜஸ்ப்ரீத் பும்ரா (89 விக்கெட்) 3வது இடத்திலும், ஹர்திக் பாண்ட்யா (86 விக்கெட்) 4வது இடத்திலும் உள்ளனர்.

2 சாதனைகள்....

வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் பாண்ட்யா இன்னும் 5 விக்கெட் எடுத்தால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளராக மாறுவார். அதுமட்டுமில்லாமல் 4 விக்கெட் கைப்பற்றினால் வங்காளதேச அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளராகவும் மாறுவார்.

இந்திய அணிக்காக அதிக விக்கெட்கள்:

1) யுஸ்வேந்திர சாஹல் - 96 விக்கெட்.

2) புவனேஷ்வர் குமார் - 90 விக்கெட்.

3) ஜஸ்ப்ரீத் பும்ரா - 89 விக்கெட்.

4) ஹர்திக் பாண்ட்யா - 86 விக்கெட்.

5) அர்ஷ்தீப் சிங் - 83 விக்கெட்.

இந்திய- வங்களதேச போட்டியில்

அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்:

1) யுஸ்வேந்திர சாஹல் - இந்தியா - 9 விக்கெட்.

2) தீபக் சாஹர் - இந்தியா - 8 விக்கெட்.

3) அல்-அமின் ஹொசைன்- வங்காளதேசம் - 8 விக்கெட்.

4) ரூபெல் ஹொசைன் - வங்காளதேசம் - 7 விக்கெட்.

5) வாஷிங்டன் சுந்தர் - இந்தியா - 7 விக்கெட்.

6) ஷகிப் அல் ஹசன் - வங்காளதேசம் - 7 விக்கெட்.

7) ரவிச்சந்திரன் அஸ்வின் - இந்தியா - 6 விக்கெட்.

8) ஹர்திக் பாண்ட்யா - இந்தியா - 6 விக்கெட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து