முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 போட்டிகள் கொண்ட தொடர்: இந்தியா - வங்காளதேசம் இன்று முதல் டி-20 போட்டியில் மோதல்

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2024      விளையாட்டு
INDIA 2024-10-05

Source: provided

குவாலியர் : சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரையும் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தியா-வங்காளதேசம் இடையேயான முதல் டி-20 போட்டி குவாலியரில் இன்று நடைபெறுகிறது.

சுற்றுப்பயணம்... 

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன் வித்தியாசத்திலும், கான்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இந்தியா-வங்காளதேசம் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் மத்தியபிரேச மாநிலம் குவாலியரில் இன்று ( 6-ந் தேதி) நடக்கிறது.

வெல்லுமா..? 

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரையும் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது. இந்திய அணி கடந்த ஜூலை மாதம் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 20 ஓவர் தொடரில் 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று சாதித்தது. அதே நிலை இந்த தொடரிலும் நடைபெறலாம் என்று கருதப்படுகிறது.

பும்ராவுக்கு....

சுப்மன்கில், பும்ரா உள்ளிட்டவர்களுக்கு 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீரர் மயங் யாதவ் மீது அவர் எதிர்பார்ப்பு உள்ளது. டெஸ்ட் தொடரை இழந்த நஜூமுல் உசேன் ஷான்டோ தலைமையிலான வங்காளதேச அணிக்கு 20 ஓவர் தொடரிலாவது வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் மோதுவது இது 15-வது முறையாகும். இதுவரை நடந்த 14 ஆட்டத்தில் இந்தியா 13-ல், வங்காளதேசம் 1-ல் வெற்றி பெற்றுள்ளன. இன்று போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்திய அணி:

 சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ரியான் பராக், ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, ரிங்குசிங், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, மயங்க் யாதவ்.

வங்காளதேசம்: 

நஜூமுல் உசேன் ஷான்டோ (கேப்டன்), ஜாகர் அலி, லிட்டன்தாஸ், பர்வேஷ் உசேன், தன்ஜித் ஹசன், தவ்கீத் ஹிர்தோய், மெகிதி ஹசன், மகமதுல்லா, மிராஸ், முஷ்டாபிசுர் ரகுமான், ரகிபுல் ஹசன், நிஷந்த் உசேன், ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம், தக்ஷின் அகமது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து