முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்க மாட்டோம்: பிரான்ஸ் அதிபர்

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2024      உலகம்
Macron 2024-06-25

Source: provided

பாரிஸ் : இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தியதாகவும் மற்ற நாடுகளும் ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டும் என்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்..

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது இஸ்ரேல் போரை தொடங்கி இன்றுடன் ஓர் ஆண்டாகிறது. இந்த போர் தொடங்கிய நாளில் இருந்து லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவததைத் தொடர்ந்து அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தியதாகவும், போரை நிறுத்த மற்ற நாடுகளும் இதனை முன்னெடுக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி கடந்தாண்டு மட்டும் 30 மில்லியன் யூரோக்கள் மதிப்பில் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு பிரான்ஸ் வழங்கியுள்ளது. 

ஆனால், இஸ்ரேலும் அதிகளவில் ஆயுதங்கள் வழங்கும் முதன்மை நாடாக பிரான்ஸ் இருந்ததில்லை.  இன்றைய அரசியல் ரீதியான தீர்வுக்கு என்ன தேவை என்றால் காசாவில் நடத்தப்படும் போருக்குத் தேவையான ஆயுதங்கள் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து