முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் கட்சி மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் சிந்திப்போம்: புதுவை முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2024      இந்தியா
Rangasamy 2024-10-06

Source: provided

புதுச்சேரி : நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் சிந்திப்போம் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். 

புதுவை முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

நமது மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ரேசன் கடைகள் திறப்பது குறித்து அரசு முடிவு எடுத்துள்ளது. தீபாவளிக்கு முன்பாக அனைத்து ரேசன் கடைகளை திறக்க ஏற்பாடு செய்துள்ளோம். முதலில் ரேசனில் 2 கிலோ இலவச சர்க்கரை, 10 கிலோ இலவச அரிசி தீபாவளி பண்டிகைக்காக வழங்கப்படும். 

கடைகளில் பணியாற்றுவோருக்கு ஒரு மாத சம்பளம் தரப்படும். பிறகு தொடர்ந்து சம்பளம் தர நடவடிக்கை எடுக்கப்படும். ரேசன் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ. 1.45 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். அடுத்து அரிசி, சர்க்கரை டெண்டர் வைத்து வழங்குவோம். 

இலவச அரிசி உள்ளிட்ட பொருட்களை வீடு தேடி சென்று தர ஆலோசனை செய்து வருகிறோம். மாநில அந்தஸ்து தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க எண்ணமும் உள்ளது. 

நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். நன்றாக வரவேண்டும். மனதார வாழ்த்துகிறேன். எல்லாவற்றுக்கும் மேலும் உயர வாழ்த்துக்கிறேன். இதுவரை மாநாட்டில் பங்கேற்க அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் பிறகு சிந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து