முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட 8 மாநில முதல்வர்களுடன் இன்று அமித்ஷா ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2024      இந்தியா
amit-shah 1

Source: provided

புதுடெல்லி : நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (7-ம் தேதி) ஆலோசனை நடத்துகிறார்.

சத்தீஷ்கர் மாநிலத்தில் 2 நாட்கள் நடத்தப்பட்ட பாதுகாப்பு படை வீரர்களின் அதிரடி வேட்டையில் 31 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நிலையில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (7-ம் தேதி) ஆலோசனை நடத்துகிறார். 

டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. ஆந்திரா, பீகார், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், தெலுங்கானா, ஒடிசா, மராட்டியம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

5 மத்திய அமைச்சர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள். துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், மத்திய மாநில அரசுகளின் ஆயுதபடை உயர் போலீஸ் அதிகாரிகளும் இதில் பங்கேற்கிறார்கள். 

கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி இந்த கூட்டம் நடைபெற்றது. நக்சலைட்டுகளின் பாதிப்பு 86 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாக குறைந்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து