முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் குடியிருப்பு கட்டிடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2024      இந்தியா
Mumbai 2024-10-06

Source: provided

மும்பை : மராட்டிய மாநிலம் மும்பையின் செம்பூர் பகுதியில் நேற்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. சித்தார்த் காலனியில் உள்ள கடையுடன் கூடிய குடியிருப்பு கட்டிடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கடுமையாக போராடி தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

வீட்டில் இருந்த 7 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள கடையில் மின் வயரிங் மற்றும் பொருட்களில் முதலில் தீப்பற்றியதாகவும், அதன் பின்னர் மேலே உள்ள வீட்டுக்கு தீ பரவியதாகவும் தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து