முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பச்சை நிற பாக்கெட் பால் உற்பத்தி நிறுத்தமா?: ஆவின் நிர்வாகம் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024      தமிழகம்
Aavin-2023-11-02

Source: provided

சென்னை : பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் பச்சை பாக்கெட் பால் விற்பனை செய்யப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பெயரில், கூடுதல் விலையில் திருச்சி மண்டலத்தில் ஆவின் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 

இதனையடுத்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

ஆவின் நிறுவனம் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. மக்கள் நலன் கருதி, எதிர்வரும் பால் தேவையை கருத்தில் கொண்டும் மற்றும் பால் சந்தையில் அனைவரும் விரும்பும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு மற்றும் இதர கொழுப்புச் சத்துகளை சற்று உயர்த்தி புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும், பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட உள்ளது. மேலும் எந்த விதமான புதிய வகை பாலின் விற்பனையையும் இதுவரை ஆவின் துவங்கவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 min ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 14 min ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து