முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலைவாசி உயர்வால் போராடும் மக்கள்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2024      இந்தியா
Rahul 2024-06-28

Source: provided

புதுடில்லி : விலைவாசி உயர்வால் மக்கள் போராடும் போது, மத்திய அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்னம் செய்துள்ளார்.

இது குறித்து சமூகவலைதளத்தில், ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன்பு, நான் உள்ளூர் காய்கறி சந்தைக்கு சென்றேன். அங்கு பணவீக்கம் எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து விற்பனையாளர்களுடன் பேசினேன். மக்களின் கருத்துகளை கேட்டேன். விலைவாசி உயர்வால் மக்கள் போராடும் போது, மத்திய அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது. ஒரு காலத்தில் 40 ரூபாய் இருந்த பூண்டு, தற்போது ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலைவாசி உயர்வால் மக்கள் போராடி வருகின்றனர். அன்றாட தேவைக்கான சிறு விஷயங்களில் சமரசம் செய்துகொள்ளும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். சந்தையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, ​​இல்லத்தரசிகளின் பிரச்னைகளை நாங்கள் நன்றாகப் புரிந்துகொண்டோம். வருமானம் எப்படித் தேக்கமடைகிறது, பணவீக்கம் கட்டுப்பாடில்லாமல் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை உணர்ந்தேன். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 10 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 10 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 12 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 10 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து