முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் ரயிலுக்குள் பெண் மீது தீ வைத்து கொன்றவர் கைது

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2024      உலகம்
Jaill 20221 01 04

Source: provided

நியூயார்க் : ரயிலுக்குள் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண்ணின் மரணத்தில் கொலை மற்றும் தீ வைத்த குற்றச்சாட்டில் ஒருவரை நியூயார்க் நகர போலீசார் கைது செய்துள்ளனர். 

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் புரூக்ளின் நகா் நோக்கி ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. மன்ஹாட்டன் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அந்த ரயிலில் ஒரு இளம்பெண் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ஒரு வாலிபர் 33 வயதான செபாஸ்டியன் சபேட்டா அவரது ஆடையில் தீ வைத்தார்.

இதனால் உடல் முழுவதும் தீ பற்றியதால் இளம்பெண் அலறி துடித்தார். ஆனால் அவர் சாகும்வரை அந்த வாலிபர் நின்று ரசித்துக் கொண்டிருந்தார். பின்னர் மன்ஹாட்டன் ரயில் நிலையத்தில் இறங்கிய அவா் சாதாரணமாக நடந்து சென்றார். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் செபாஸ்டியன் சபேட்டாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முன்விரோத தகராறில் இந்த கொலையை செய்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 10 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 10 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 12 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 10 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து