முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையினரால் 17 ராமேசுவரம் மீனவர்கள் படகுகளுடன் சிறைபிடிப்பு

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2024      தமிழகம்
Fishermen 2024-03-29

Source: provided

ராமேசுவரம் : கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 17 மீனவர்களையும் அவர்களது இரண்டு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 17 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் (டிச. 23) 383 விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கச்சத்தீவு – நெடுந்தீவுக்கு இடையே அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது, 5 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். அத்துடன் அந்தோணி ஆரோன் மற்றும் பூண்டி ராஜ் ஆகியோரது இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர்.

அந்த படகுகளில் இருந்த இருதயம், ஆரோக்கியராஜ், அந்தோணி அடிமை, முனியாண்டி, ஜெகநாதன், ராமன், ராமச்சந்திரன், பூண்டிராஜ், அமல்ராஜ், யாக்கோபு, கிருபாகரன், அருள் தினகரன் உள்பட 17 மீனவர்களை கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். இதனைதொடர்ந்து, மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவர்களை சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை நீதிவியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 10 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 10 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 12 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 10 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து