முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: விழிப்புணர்வு பஸ்களை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2024      தமிழகம்
Udhayanidhi

Source: provided

சென்னை : திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா விழிப்புணர்வு பேருந்துகளை உதயநிதி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை, அண்ணா சாலை பல்லவன் இல்ல மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்வில், முத்தமிழறிஞர் கலைஞரால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 10 விரைவு பேருந்துகளின் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்பது புகழ்மொழி. திருவள்ளுவர் அவர்கள் இரண்டு வரிகளில், சாதாரண ஏழை எளிய மக்கள் தொடங்கி, பேரரசர்களும் பின்பற்ற வேண்டிய, உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வின் அறவழி முறைகளையும், கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் அறம், பொருள், இன்பம் என வகைப்படுத்தி 1,330 திருக்குறள்களை 2,000 ஆண்டுகளுக்கு முன்பே இயற்றி உலக மக்களுக்கு, தமிழ்நாட்டின் வழிகாட்டுதலையும், சிறப்புகளை எடுத்து இயம்பினார்.

கலைஞர் கருணாநிதி, அய்யன் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலகில் உள்ள மிக முக்கியமான அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பள்ளிகள் முதல் உலகிற் சிறந்த பல்கலைக்கழகங்கள் வரை பயன்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். வள்ளுவரின் புகழை உலகமெங்கும் கொண்டு செல்ல கலைஞர் சென்னையில் அமைத்த வள்ளுவர் கோட்டத்தோடு நில்லாமல், கடல் அலைகள் தாலாட்டும் குமரிக்கடல் நடுவே திருவள்ளுவருக்கு 133 அடியில் வானுயர சிலை அமைக்க முடிவு செய்தார்.

குமரியில் சிலை அமைக்க 1975-ம் ஆண்டே திட்டமிட்டாலும், அவரது கனவு நினைவாக பல ஆண்டுகள் காலம் ஆனது. 133 அதிகாரங்களை குறிக்கின்ற வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 133 அடியில் சிலையை உருவாக்குகின்ற பொறுப்பை 1996‑ம் ஆண்டில் சிற்பி கணபதி ஸ்தபதியாரிடம் ஒப்படைத்தார். செவ்வனே முடிவுற்ற திருவள்ளுவர் சிலையை 2000-ம் ஆண்டு ஜனவரி முதல் நாள் தொடங்கும் மணித்துளியில் முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்கள், தமிழறிஞர்கள் முன்னிலையில் மிகப் பெரிய விழா எடுத்து திறந்து வைத்து, உலக வரலாற்றின் முக்கிய மணித்துளியில் நடைபெற்ற ஒரே நிகழ்வாக இடம் பெறச் செய்தார்.

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி, வருகின்ற  31-ம் தேதி மற்றும் ஜனவரி 1-ம் தேதி இரண்டு நாட்களும் வெள்ளிவிழா நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்திருக்கிறது. இந்த வெள்ளிவிழாவை முன்னிட்டு திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 10 விரைவு பேருந்துகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த 10 பேருந்துகளும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்கள் மற்றும் பெங்களூர் மாநகரத்திற்கு செல்லும் வழித்தட பேருந்துகளாக தேர்வு செய்யப்பட்டு திருவள்ளுவரின் உருவப்படங்கள் மற்றும் புகழினை தாங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 10 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 10 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 12 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 10 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து