முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் தேர்தலில் வெற்றி: டிரம்புக்கு எலான் மஸ்க் வாழ்த்து

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      உலகம்
Elon-Musk 2024 08 18

Source: provided

வாஷிங்டன் : டிரம்பின் தீவிர ஆதரவாளரான எலான் மஸ்க் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்புக்கு வாழ்த்து

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிவாகை சூடியுள்ளார். இதையடுத்து அவருக்கு பலதரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் எலான் மஸ்க், உலகளவில் அதிகமானோர் பயன்படுத்தும் சமூக வலைதளமான தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் தேர்தலுக்கு முன்பாகவே டிரம்புக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில், டிரம்பின் தீவிர ஆதரவாளரான எலான் மஸ்க் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு பதிவுகளை பதிவிட்டுள்ளார். தற்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், எலான் மஸ்க்கின் பதிவுகள் கவனத்தை ஈர்க்கின்றன. அவர் வெளியிட்டுள்ள முக்கியமான பதிவொன்றில், “கட்டமைப்பாளர்களாலான இந்த அமெரிக்க தேசத்தை கட்டமைக்க உங்களுக்கு (மக்களுக்கு) விரைவில் சுதந்திரம் அளிக்கப்படும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து