முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர்களுக்கான உதவி மையம் அமைக்கப்படும்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      தமிழகம்
Kovi-Chezhian 2024-11-09

சென்னை,  உயர்கல்வி தொடர்பான தகவல்களை வழங்க தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உதவி மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உயர்கல்வித் துறையின் கீழ் 13 பல்கலைக் கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள். 52 தொழில்நுட்பக் கல்லூரிகள்/சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி, மாணவ, மாணவியருக்கு வெளிப்படையான, பதிலளிக்கக்கூடிய மற்றும் அணுகுவதற்கு எளிமையான ஒரு சூழலை ஏற்படுத்தும் விதமாக உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஓர் உதவி மையம் அமைக்கப்படும்.

மாணவர் சேர்க்கைக்காகவும் மற்றும் இதர காரணங்களுக்காகவும் மேற்குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு வருகை தரும் மாணவ, மாணவியர். பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அந்நிறுவனங்களில் வழங்கப்படும் பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்கள் அறிய இவை ஏதுவாக இருக்கும்.

மேலும் துறை அலுவலகங்களின் அமைவிடம், தனியர்களின் கோரிக்கை தொடர்பாக எந்த அலுவலரை அணுகுவது, அலுவலக நடைமுறைகள், தனியர்களின் கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள ஏதுவாக மேற்குறிப்பிட்டுள்ள உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அக்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம்(Help Desk) கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும்.

இந்த மையம் பயனாளிகளுக்கு எளிதில் உதவும் வகையில் அமைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ", 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து