முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூரில் கோர்ட்டு வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

புதன்கிழமை, 20 நவம்பர் 2024      தமிழகம்
Cort 2023 04 17

ஓசூர், ஓசூரில் கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏரி தெருவை சேர்ந்தவர் கண்ணன் (30). வழக்கறிஞரான இவர் ஓசூர் கோர்ட்டு வளாகத்தில் இருந்துள்ளார். அப்போது வழக்கறிஞர் ஆனந்தன் என்பவர் கண்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கண்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வழக்கறிஞரை வெட்டிய ஆனந்தன் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடி, அருகில் இருந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தவர் பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன் என்பது தெரியவந்துள்ளது.  

நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் அரிவாளால் வெட்டியுள்ளார். வழக்கறிஞரை வெட்டிய ஆனந்தன், வேறொரு வழக்கறிஞரின் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் கண்ணனை வெட்டியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் கண்ணனுக்கு கழுத்து, தலை, முதுகு உள்ளிட்ட 5 இடங்களில் பலத்த வெட்டு காயம் விழுந்துள்ளது. கோர்ட்டு  வளாகத்தில் பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் பொதுமக்களும் வழக்கறிஞர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஓசூரில் கோர்ட்டு  வளாகத்திலேயே இளம் வழக்கறிஞர் ஓட ஓட வெட்டப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து