முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டிய சட்டசபை தேர்தல்: முதல்வர் ஷிண்டே உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு

புதன்கிழமை, 20 நவம்பர் 2024      இந்தியா
Eknath-Shinde 2023-12-03

மும்பை, மராட்டிய சட்டமன்றத் தேர்தலில் அம்மாநில முதல்வர்  ஏக்நாத்ஷிண்டே உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். 

மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நேற்று நடைபெற்றது.   மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று  வாக்களித்தனர். தானே பகுதியில் அம்மாநில முதல்வர் ஏக்நாத்ஷிண்டே குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் துணை முதல்வர் தேவிந்திர பட்னாவிஸ் ஆகியோர் நாக்பூரிலும், மத்திய  அமைச்சர் பியுஷ் கோயல் மும்பையிலும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 

 மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் மராட்டிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மனைவி மற்றும் மகன் ஆதித்யா தாக்கரேவுடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். 

இதே போல பாலிவுட் நடிகர்கள் சுனில் ஷெட்டி, நிகிதா தத்தா, திரைப்பட இயக்குனர் சுபாஷ் கை ஆகியோரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

தமிழகத்தை சேர்ந்த மகராஷ்டிர மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவரது மனைவி,  இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா, பாலிவுட் பிரபலங்கள் அக்‌ஷய் குமார், ராஜ்குமார் ராவ், கவுதமி கபூர், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) தலைவர் சரத்பவார், சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் மும்பையில் வாக்குச் சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து