முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரமடையும் போர்: உக்ரைனில் அமெரிக்க தூதரகம் தற்காலிக மூடல்

புதன்கிழமை, 20 நவம்பர் 2024      உலகம்
Ukraine 2024 11 20

வாஷிங்டன், போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 1,000-வது நாளை எட்டி உள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா, உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. பதில் தாக்குதல் நடத்துவதற்கு தேவையான ஆயுதங்களையும் வழங்கி உதவுகின்றன. 

இந்நிலையில், ரஷ்யாவிற்குள் தொலைதூரத்திற்கு சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்தது. இதனால் கோபம் அடைந்த, ரஷ்ய அதிபர் புடின் கடும் கண்டனம் தெரிவித்தார். 

அதுமட்டுமின்றி அவர் ரஷ்ய படைகள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கி அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார். தற்போது இரு நாடுகள் இடையே போர் தீவிரமடைந்துள்ளது. 

இந்த சூழலில், அமெரிக்கா தயாரித்த 6 நீண்ட தூர ஏவுகணையை ரஷ்யாவின் பல பகுதிகளில் ஏவி, உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதில் 5 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில்,  உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூதரகத்தில் இருப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.  

கீவ் நகர் மீது ரஷ்யா வான்வழித்தாக்குதல் நடத்தக்கூடுமென அஞ்சப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து