முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூர் விவகாரம்: ஜனாதிபதி தலையிட காங்கிரஸ் கோரிக்கை

புதன்கிழமை, 20 நவம்பர் 2024      இந்தியா
Malligarjuna 2023-07-27

Source: provided

புதுடெல்லி : மணிப்பூர் விவகாரத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தலையிட வேண்டும்  என மல்லிகார்ஜூன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, மணிப்பூரில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மணிப்பூர் மாநில மக்கள் கண்ணியத்துடன், அமைதியாக வாழ்வதை உறுதி செய்வதற்காக இந்த விவகாரத்தில் ஜனாதிபதி உடனடியாக தலையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் தனது கடிதத்தில் மல்லிகார்ஜூன கார்கே கூறியிருப்பதாவது., மணிப்பூரில் வன்முறையில் இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த 18 மாதங்களாக மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாநில அரசும், மத்திய அரசும் தோல்வியடைந்துள்ளன. மக்களின் துயரம் தொடர்து கொண்டே இருக்கிறது.

இந்தியாவின் ஜனாதிபதியாகவும், நமது அரசியலமைப்பின் பாதுகாவலராகவும் இருந்து, அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்தவும், மணிப்பூர் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும் நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். உங்கள் தலையீட்டின் மூலம், மணிப்பூர் மக்கள் மீண்டும் கண்ணியத்துடன், பாதுகாப்பாக வாழ்வார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து