முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கயானா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

புதன்கிழமை, 20 நவம்பர் 2024      உலகம்
Modi 2024 11 20

ஜார்ஜ் டவுன், பிரேசில் பயணத்தை நிறைவு செய்து விட்டு பிரதமர் மோடி கயானா சென்றடைந்தார். ஜார்ஜ் டவுன் சென்றடைந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் கயானா அதிபர் முகமது இர்பான் அலி மற்றும் அவரது அமைச்சரவையின் மூத்த உறுப்பினர்கள் வரவேற்றனர். 

பின்னர் அந்நாட்டு முறைப்படி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. கயானா சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று அந்நாட்டு அதிபர் இர்பான் அலியை சந்தித்து பேதினார். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து கயானா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி, அதனை தொடர்ந்து அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். 56 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் கயானாவுக்கு செல்வது இதுவே முதல்முறை. 

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிறிது நேரத்திற்கு முன்பு கயானாவில் தரையிறங்கினேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்த அதிபர் இர்பான் அலி, பிரதமர் மார்க அந்தோனி பிலிப்ஸ், மூத்த அமைச்சர்கள் மற்றும் பிற உயரதிகாரிகளுக்கு நன்றி. இந்த பயணம் நமது நாடுகளுக்கிடையேயான நட்பை ஆழப்படுத்தும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து