முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் இருந்து ஐதராபாத் மற்றும் பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை துவக்கம்

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2024      இந்தியா
Air

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் மீண்டும் விமான சேவையை துணைநிலை கவர்னர், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நிறுவனங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் மூலம் விமானம் இயக்கப்பட்டு வந்தது. விமானத்தில் போதிய பயணிகள் பயணிக்காததால் கடந்த மார்ச் 30ம் தேதியுடன் விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, கடந்த 8 மாதங்களாக புதுவையில் இருந்து விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

இதையடுத்து, புதுச்சேரி அரசு மீண்டும் விமான சேவையை துவங்க நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக இண்டிகோ நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டு நேற்று 20-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை துவங்குவதாக அறிவித்தது.

அதன்படி, நேற்று காலை 11.10 மணிக்கு பெங்களூரில் இருந்து 78 இருக்கைகள் கொண்ட இண்டிகோ சிறிய ரக விமானம் 74 பயணிகளுடன் புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்தடைந்தது. விமானம் தரையிறங்கிய போது, தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், விமானத்தில் வந்த பயணிகளுக்கு பூ மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மதியம் 12.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து 63 பயணிகளுடன் ஐதராபாத்துக்கு விமானம் புறப்பட்டது. இந்த விமான சேவையை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணகுமார், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், தலைமைச் செயலர் சரத் சௌகான், ஆளுநரின் செயலர் நெடுஞ்செழியன், சுற்றுலாத்துறை செயலர் ஜெயந்த் குமார் ரே, சுற்றுலா துறை இயக்குநர் முரளிதரன், புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விமான சேவை தினமும் இருக்கும். பெங்களூருவில் இருந்து காலை 11.10 மணிக்கு புறப்படும் விமானம் பகல் 12.25க்கு புதுச்சேரி வந்தடையும். பின்னர், மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். அதேபோல் ஐதராபாத்திலிருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்படும் விமானம் புதுச்சேரிக்கு மாலை 4.30 மணிக்கு வந்தடையும். பின்னர் மாலை 5.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.35 பெங்களூரு சென்றடையும். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் இருந்து தொடர்ந்து விமான சேவை செயல்பட வேண்டும் என்பதே எண்ணம். விமான நிலையம் விரிவாக்கப்பணி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கிறோம். தமிழக முதல்வரை தொடர்பு கொண்டு விமான நிலையம் அருகேயுள்ள தமிழக நிலங்களை கையகப்படுத்தி தர கேட்டு உள்ளோம். விரிவாக்கப்பணி முடிந்தால் அதிக விமானங்கள் புதுச்சேரி வரும். இதையடுத்து மதுரை, தூத்துக்குடி, கொச்சி, கோழிக்கோடு பகுதிகளுக்கு புதுச்சேரியிலிருந்து விமான சேவை தொடங்க சாத்தியக்கூறு ஆராயப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து