எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லையென்றால், மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், ஒருபுறம் அரசியல் சட்டத்திற்கு விழா. இன்னொரு புறம் அதை உருவாக்கித்தந்த அம்பேத்கருக்கு அவதூறு. இதுதான் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் ஆகும்.” என்றும் அவர் விமர்சித்துள்ளார். தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடுகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களின் செயல்பாடுகளைப் பாராட்டியும், கூட்டத்தொடர் முழுவதும் பா.ஜ.க. அவையை முடக்கியதாகவும் குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,“தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லையென்றால் - தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையின் விவரம் வருமாறு., இந்திய பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் முடிவுற்றுள்ளது. இக்கூட்டத் தொடரில் வீறுகொண்ட வீரர்களாக தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் முழங்கி இருக்கிறார்கள்.
தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளைப் பார்த்து நாடே வியந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நலனுக்காக குரல் கொடுப்பது - மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பி அவையின் கவனத்தை ஈர்ப்பது ஆகிய இரண்டையும் வெற்றிகரமாகச் செய்து காட்டி இருக்கிறார்கள். மற்ற மாநில எம்.பி.க்களுக்கு முன்னோடிகளாக கழக எம்.பி.க்கள் செயல்படுவதைப் பார்த்து - நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் தலைவராக நான் எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.
தி.மு.க. எம்.பி.க்கள் என்ன பேசுகிறார்கள் - நாட்டை உலுக்கும் முக்கியப் பிரச்சினைகளில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை இன்று நாடே உன்னிப்பாக கவனிக்கும் நிலைக்கு இந்த திராவிடப் பேரியக்கம் வளர்ந்திருப்பதை நினைத்தும் பெருமையாக இருக்கிறது. அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் என, தான் பொறுப்பேற்று பதில் சொல்லியே ஆகவேண்டிய அனைத்திலும் கனத்த மவுனம் காக்கும் பிரதமர் பாராளுமன்றத்தில் பா.ஜ.க.வினரால் ஜனநாயகம் படாத பாடு பட்டபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அவையை நடத்த விரும்புவதை விட- அவையை முடக்க வேண்டும், அரசின் தோல்விகள் குறித்த எந்த விவாதமும் நடைபெற்று விடக்கூடாது என்பதையே மனதில் வைத்து பா.ஜ.க. எம்.பி.க்கள் செயல்பட்டதை நாம் காணமுடிந்தது. ஆக்கப்பூர்வமான விவாதம் செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பது பாராளுமன்றத்தைப் பொறுத்தமட்டில் அரிதான நிகழ்வாக பா.ஜ.க. ஆட்சியில் மாறி விட்டதை எண்ணி ஒரு மிகப்பெரிய ஜனநாயக இயக்கமாம் தி.மு.க. கவலை கொள்கிறது.
குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்து பாராளுமன்ற விவகாரங்கள் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மக்களவையானது 54.5 விழுக்காடும், மாநிலங்களவை 40 விழுக்காடும்தான் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைவிட வேதனையான செய்தி இருக்க முடியுமா?
நமது நாட்டின் பெருமைமிக்க அரசியல் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின்போது – பா.ஜ.க. ஆட்சியின் கையில் “பாராளுமன்ற ஜனநாயகம்” எப்படி பிய்த்து எறியப்பட்டுள்ளது என்பதற்கு இந்த குளிரகாலக் கூட்டத்தொடரே சாட்சி. அரசியல்சட்டத்தின் 75 ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது – அச்சட்டத்தை உருவாக்கித் தந்த அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சரே அவதூறுசெய்து - இழிவுபடுத்திப் பேசுவது பா.ஜ.க.வின் உயர்வர்க்க பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது. ஒருபுறம் அரசியல் சட்டத்திற்கு விழா - இன்னொரு புறம் அதை உருவாக்கித்தந்த அண்ணலுக்கு அவதூறு! இதுதான் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் ஆகும்.
இவ்வளவு களேபரத்திலும் – தி.மு.க. மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்ற தவறவில்லை என்பது - இவர்கள் கலைஞர் வளர்த்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்ட திராவிட இயக்க ஆற்றலாளர்கள் என்பதை அரங்கேற்றியுள்ளது.
“ஒரே நாடு ஒரே தேர்தலை” கடுமையாக எதிர்த்துப் பேசிய தி.மு.க. மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு - “மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை ரத்து செய்யுங்கள்” என்றும் “பேரிடர் மேலாண்மை 2024 திருத்தச் சட்டத்தை எதிர்த்தும்” அனல் பறக்கப் பேசிய தி.மு.க. பாராளுமன்றக் குழுத் தலைவர் தங்கை கனிமொழி - “அவைக்குப் பிரதமரே வருவதில்லை” என்று முழங்கிய திருச்சி சிவா - அரசியல் சட்டத்தின் 75 ஆவது ஆண்டில், “அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறு கட்டமைப்புக் கூறுகளும் - கேசவானந்த பாரதி வழக்கும்” என அரசியல்சட்ட நுணுக்கம் நிறைந்த ஆ.இராசா - மாநில உரிமைகளைப் பற்றியும், மதவாத அரசியல் அச்சுறுத்தல் குறித்தும் உரையாற்றிய ஜெகத்ரட்சகன் - “வானிலை அறிவிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துக” என தயாநிதி மாறன் - என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மத்திய அரசைத் தட்டிஎழுப்பினார்கள்.
தமிழ்நாடு நலன் சார்ந்த - நம் நாட்டு நலன் சார்ந்த பேச்சுக்களை நான் மட்டுமல்ல நாடே கைதட்டி இப்படியல்லவா பாராளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் எனப் பாராட்டி வருகிறது. குளிர்காலக் கூட்டத்தொடரில் மட்டும் நம் எம்.பி.க்கள் ஆக்கப்பூர்வமாக எழுப்பிய அடுக்கடுக்கான திட்டங்கள் பற்றி இங்கே சுட்டிகாட்ட விரும்புகிறேன்.
இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை, ரயில்வே திட்டங்கள், மெட்ரோ ரயில் திட்ட நிதி ஒதுக்கீடு, > சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ்தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது, விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரிக்கை, விவசாயிகளுக்கான பி-எம். கிசான் திட்டத்தின்கீழ் போதிய நிதி ஒதுக்காதது, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்துதல், சுங்கச்சாவடிகளை ஒழித்தல், நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, நீதித்துறையில் பன்முகத்தன்மை கோரிக்கை, சிறுபான்மையினர் பொருளாதாரத் திட்டங்கள் பற்றிய கோரிக்கை, சிறுபான்மையினரைத் தாக்கிப் பேசிய உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பாராளுமன்றக் கண்டனத் தீர்மானம், நீட் தேர்வு முறைகேடுகள், வக்ப் வாரிய சட்டத் திருத்த எதிர்ப்பு, தமிழ்நாட்டின் விமான நிலையத் திட்டங்கள், இந்திய - சீன எல்லைப் பிரச்சினை பற்றி வெள்ளை அறிக்கை கோரியது, சென்னை-தூத்துக்குடி வந்தே பாரத், பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்காதது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை, மதுரை எய்ம்ஸ், நூறு நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி - தினக் கூலியையும் உயர்த்துவது, அகழ்வாராய்ச்சிக்குத் தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை, இப்படி எண்ணற்ற திட்டங்களை - தமிழ்நாட்டின் உரிமைகளை - எந்த மாநில எம்.பி.க்களைக் காட்டிலும் – தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய கழக எம்.பி.க்கள் எழுப்பியது எழுச்சியூட்டியது.
அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக - தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்து வரும் தி.மு.க.வின் தலைவர் என்ற நிலையில் நம் எம்.பி.க்களின் சாதனைகளை மார்தட்டி அறிவித்துக்கொள்ள வேண்டியது முக்கியம் என்றே கருதுகிறேன்.
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் குரலாகக் கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகள் - எழுப்பிய மாநில உரிமை முழக்கங்கள் – ஜனநாயகத்தைப் பாழ்படுத்தும் “ஒரே நாடு ஒரே தேர்தலை” ஆணித்தரமாக எதிர்த்த பாராளுமன்றக் குரல்கள் எல்லாம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் செவிகளில் உரக்கவே விழுந்திருக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதன் மூலம் மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை – தமிழ்நாட்டு மக்களை ஓரவஞ்சனையுடன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்த முடியாது என்ற செய்தியை அழுத்தம் திருத்தமாகக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்கள் நமது எம்.பி.க்கள்! இனியும் மத்திய அரசு திருந்தவில்லை என்றால் - தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லையென்றால் - தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி!. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-03-2025.
11 Mar 2025 -
தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் : இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது
11 Mar 2025சென்னை : தாம்பரம்-திருச்சி சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
-
அ.தி.மு.க. வழக்கறிஞர் மீதான தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
11 Mar 2025சென்னை, வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க. -வினர் மீது நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் 14-ந்தேதி திறப்பு
11 Mar 2025திருவனந்தபுரம் : பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.
-
போப் பிரான்சிஸ் நலம்பெற்று வருகிறார்: வாடிகன் தகவல்
11 Mar 2025ரோம் : போப் பிரான்சிஸ் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து படிப்படியாக நலம்பெற்று வருவதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
-
வரும் 14-ம் தேதி தொடங்கும் கச்சத்தீவில் அந்தோணியார் விழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
11 Mar 2025ராமேசுவரம் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழானையோட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
-
கூகுளைவிட 10 லட்சம் மடங்கு வேகம்: புதிய கணினியை அறிமுகம் செய்த சீனா
11 Mar 2025சீனா : கூகுளைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக கணினியை அறிமுகம் செய்த சீனா.
-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகள் முழுமையாக இல்லை : பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
11 Mar 2025புதுடில்லி : மதுரை மற்றும் கோயம்புத்தூா் மெட்ரா ரயில் திட்டங்களுக்காக தமிழக அரசு சமா்ப்பித்த திட்ட அறிக்கைகள் முழுமையாக இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் 
-
எக்ஸ் தளம் மீது சைபர் தாக்குதல்: உக்ரைன் மீது மஸ்க் குற்றச்சாட்டு
11 Mar 2025வாஷிங்டன் : எக்ஸ் சமூக வலைதளம் முடக்கத்திற்கு காரணம் உக்ரைன்னா என்று எலான் மஸ்க் குற்றச்சாட்டியுள்ளார்.
-
தங்கம் விலை குறைந்தது
11 Mar 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 11) சவரனுக்கு ரூ. 240 குறைந்து விற்பனையானது.
-
கிரீன்லாந்தில் தேர்தல்: அமெரிக்காவுடன் இணைய வாக்காளர்கள் விருப்பம்..?
11 Mar 2025அமெரிக்கா : கிரீன்லாந்து வாக்காளர்கள் பலரும் அமெரிக்காவுடன் இணைந்து பயணிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக சமீபத்திய கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
-
டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டார் ஸெலென்ஸ்கி
11 Mar 2025அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி மன்னிப்புக் கேட்டதாக டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் தெரிவித்தார்.
-
தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம்: சென்னை வருகிறார் நவீன் பட்நாயக்; தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் தகவல்
11 Mar 2025புவனேஸ்வர் : பாராளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடக்க உள்ள கூட்டத்தில் பிஜு ஜனதா தள கட்சித் தலைவரும் ஒடிசா முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் பங்கேற்க உறு
-
நீண்டகால அமைதி, பொருளாதார உறவுகள்: சவுதி அரேபிய இளவரசருடன் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை
11 Mar 2025கீவ் : நீண்டகால அமைதி, இருதரப்பு பொருளாதார உறவுகள் பற்றி சவுதி அரேபிய இளவரசருடன் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
-
அரசுமுறைப் பயணமாக அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்ட் இந்தியா வருகிறார்
11 Mar 2025அமெரிக்கா : அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துளசி கப்பார்ட் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வரவுள்ளார்.
-
புதுக்கோட்டைவேங்கைவயல் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட மூவர் கோர்ட்டில் ஆஜர்
11 Mar 2025வேங்கைவயல் : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு போக்குவரத்து துறை அறிவிப்பு
11 Mar 2025சென்னை, மகளிர் சுய உதவிக்குழுவினர் பொருட்களை அரசு பஸ்களில் கட்டணமின்றி எடுத்து செல்லலாம் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
-
உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 5வது இடம்
11 Mar 2025புதுடெல்லி, சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐ.கியூ.ஏர் இன் உலக காற்று தர அறிக்கை 2024 வெளியாகி இருக்கிறது.
-
பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் 23 பேர் டிஸ்மிஸ் : தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி
11 Mar 2025சென்னை : பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என 23 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
-
மேட்டூர் அனல் மின் நிலைய ஊழியர்களுக்கு ஆதரவாக த.வெ.க. ஆர்ப்பாட்டம்
11 Mar 2025மேட்டூர் : சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றிக்கழகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
-
மொரீஷியஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
11 Mar 2025போர்ட் லூயிஸ், 2 நாள்கள் அரசுமுறை பயணமாக மோரீஷஸ் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
வரும் 14-ம் தேதி தொடங்கும் கச்சத்தீவில் அந்தோணியார் விழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
11 Mar 2025ராமேசுவரம் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழானையோட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
-
வரிகளைக் குறைப்பது பற்றி எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை: ட்ரம்ப் பேச்சுக்கு வர்த்தக செயலாளர் விளக்கம்
11 Mar 2025புதுடெல்லி, அமெரிக்க பொருள்களுக்கு வரிகளைக் குறைப்பது பற்றி எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என்று வர்த்தக செயலாளர் சுனில் பர்த்வால் நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்த
-
கேரளாவில் போதைப் பொருள்கள் வைத்திருந்ததாக 378 பேர் கைது
11 Mar 2025திருவனந்தபுரம், கேரள கலால் துறை போலீசார் நடத்திய ஆபரேசனில் மூன்று நாள்களில் போதைப் பொருள்கள் வைத்திருந்த 378 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இயக்குனர் ஷங்கரின் சொத்து முடக்கத்துக்கு இடைக்கால தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு
11 Mar 2025சென்னை, இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்து முடக்கத்துக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.