முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மெட்ரோ ரயில் திட்டம்: மெட்ரோ இயக்குநர் நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024      தமிழகம்
Madurai-Metro 2024-12-21

Source: provided

மதுரை: மதுரை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படுவது குறித்து சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் அர்ஜூனன் நேற்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.

மதுரையில் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சுரங்கப் பாதைகள், ரயில் நிலையங்கள், சந்திப்புகள் அமையும் இடங்கள் குறித்து மெட்ரோ திட்ட இயக்குநர் அர்ஜூனன் கள ஆய்வு மேற்கொண்டார். நேற்று மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஜெய்ஹிந்த்புரம், ஆண்டாள்புரம் வரை கள ஆய்வு நடந்தது. மெட்ரோ ரயில் சேவைக்கான சுரங்கங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளையம் ஆர்ஜூனன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

மதுரையில் 11,368 கோடியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை திருமங்கலம் - ஒத்தக்கடை வரையிலான 31 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, திட்டப் பாதையின் பல்வேறு பகுதிகளில் மண் பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தற்போது கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் என்பது, திருப்பரங்குன்றம்-மதுரை- ஒத்தக்கடை வரையிலான 31 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு, மெட்ரோ ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை மெட்ரோ திட்ட செயலாக்கம் குறித்து பலகட்ட ஆலோசனைகள் நடைபெற்று முடிந்துள்ளன. மெட்ரோ ரயில் பாதை வைகை ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியுள்ளதால், அழகா் வைகையில் இறங்கும் வைபவத்துக்கு எந்த இடையூறும் இல்லாதவாறு, வைகை ஆறு பகுதியில் பூமிக்கடியில் மெட்ரோ ரயில் பாதையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, மதுரை வைகை ஆற்றில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணியும் நடத்தப்பட்டது. துளையிடும் இயந்திரத்தைப் பயன்படுத்தி மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து