முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலால் கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி துணைநிலை கவர்னர் அனுமதி

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024      இந்தியா
0

Source: provided

புதுடெல்லி: கலால் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்குத் தொடர்பாக அமலக்கத்துறைக்கு டெல்லி துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.

டெல்லியில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கலால் கொள்கை தொடர்பான வழக்கை விசாரிக்க கெஜ்ரிவால் சார்பில் வழக்குரைஞர்கள் கேட்டுக்கொண்டது. இதையடுத்து டிசம்பர் 5-ம் தேதி கெஜ்ரிவாலுக்கு எதிராக கலால் கொள்கை வழக்கை மீண்டும் விசாரிக்க அமலாக்கத்துறை துணைநிலை கவர்னரிடம் அனுமதி கோரியது.

இந்த நிலையில், கலால் கொள்ளை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க அமலாக்கத்துறைக்குத் துணைநிலை கவர்னர் சக்சேனா அனுமதி அளித்துள்ளார். சமீபத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் மீது அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகிய இருவரும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய இரு வழக்குகளிலும் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து