முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024      தமிழகம்
Fisherman-Attack 2024-12-21

Source: provided

வேதாரண்யம்: நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் 2 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கரை திரும்பிய மீனவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அக்கரைப்பேட்டை, பெருமாள் பேட்டை பகுதியை சார்ந்த மீனவர்கள் இரண்டு படகுகளில் வழக்கம்போல மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். மீனவர்கள் கோடியக்கரை அப்பால் வெள்ளிக்கிழமை இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, இரண்டு படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் படுகாயம் அடைந்த மீனவர்கள் ராஜேந்திரன், ராஜ்குமார்.இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் படுகாயம் அடைந்த மீனவர்கள் ராஜேந்திரன், ராஜ்குமார்.  மேலும் மீனவர்களின் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருள்களை அவர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த மீனவர்கள் ராஜேந்திரன், ராஜ்குமார் ஆகியோர் சனிக்கிழமை காலை கரையேறி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து