முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனித உரிமைகள் ஆணைய தலைவர் நியமனம்: தவறான தேர்வு செயல்முறை என்று காங்கிரஸ் கட்சி புகார்

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2024      இந்தியா
Rahul 2024-12-20

Source: provided

புதுடில்லி : தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராக ராம சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்.பி., ராகுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தவறான தேர்வு செயல்முறை என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர்கள், தங்களது பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய மனித உரிமைகள் கமிஷனின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராம நீதிபதி சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். கமிஷனின் தலைவராக இருந்த சுப்ரீம் கோர்டடின் முன்னாள் நீதிபதி ஏ.எம்.மிஸ்ரா, கடந்த ஜூன் 1ம் தேதி ஓய்வு பெற்றார். புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு, பார்லிமென்ட் வளாகத்தில் கடந்த டிச.,18ம் தேதி கூடி விவாதித்தது.

தேர்வுக்குழுவில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபா எதிர்க் கட்சி தலைவர் ராகுல், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தேசிய மனித உரிமைகள் கமிஷனின் தலைவராக ராம சுப்பிரமணியனை ஜனாதிபதி திரெளபதி முர்மு நேற்று முன்தினம் நியமித்தார்.

கமிஷனின் உறுப்பினர்களாக பிரியங்க் கனுாங்கோ, முன்னாள் நீதிபதி பித்யூத் ரஞ்சன் சாரங்கி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை கமிஷன் தலைவராக ராம சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்.பி., ராகுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேர்வு செயல்முறை தவறு என அவர்கள் குறை கூறி உள்ளனர்.

ஆலோசனையின் போது பரஸ்பர ஆலோசனை மற்றும் ஒருமித்த கருத்து புறக்கணிக்கப்பட்டது என்றும் கார்கே, ராகுல் குற்றம் சாட்டி உள்ளனர். மனித உரிமை கமிஷன் தலைவர் பதவிக்கு நீதிபதிகள் ரோஹிண்டன் பாலி நாரிமன் மற்றும் மேத்யூ ஜோசப் ஆகியோரின் பெயரை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்.பி., ராகுல் முன்மொழிந்தனர். மனித உரிமை கமிஷன் உறுப்பினர்களாக, நீதிபதி எஸ். முரளிதர் மற்றும் நீதிபதி அகில் அப்துல்ஹமித் குரேஷி ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்தனர். ஆனால் தங்கள் கருத்து புறக்கணிக்கப்பட்டதாக, காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 22 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து