முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையம் பதில்

புதன்கிழமை, 25 டிசம்பர் 2024      இந்தியா
Election-Commision 2023-04-20

புதுடெல்லி, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவு குறித்து காங்கிஸ் கட்சி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சிகள் அங்கம் வகித்த மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் மீது இக் கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. மேலும், தேர்தலுக்கு முன்பாக மாநில வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். பலர் நீக்கப்பட்டனர் என்றும் அக்கட்சிகள் குற்றம் சாட்டின.

காங்கிரஸ் கட்சி சார்பில் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த சந்தேகங்கள் அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:- தேர்தலின்போது, மாலை 5 மணி முதல் இரவு 11.45 மணி வரையில் வாக்குப் பதிவு அதிகரித்திருப்பது குறித்து காங்கிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. இது சாதாரணமாக நடை பெறக்கூடிய ஒன்றுதான். வாக்காளர் எண்ணிக்கையை திரட்டும் தேர்தல் ஆணைய நடவடிக்கைகளின் ஓர் அங்கம்தான் இது.

அதே நேரம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப் பதிவு முடிவடையும் நேரத்தில், அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப் பட்ட முகவர்களிடம், வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய '17சி' என்ற சட்டப்பூர்வ படிவம் வழங்கப்பட்டுவிடும். எனவே, உண்மையான வாக்காளர் எண்ணிக்கையை மாற்றுவது சாத்தியமற்றது.

அதுபோல, மகாராஷ்டிர மாநில வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியானது வெளிப்படைத் தன்மையுடன், உரிய சட்ட நடைமுறைகளுடன் மேற்கொள்ளப்பட்டது. வாக்காளர் பட்டியலில் வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கம் செய்தலில் எந்தவித தன்னிச்சையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளில் காங்கிரஸ் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

எனவே, மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றிபெற்ற 47 தொகுதிகள் உள்பட 50 தொகுதிகளில் கடந்த ஜூலை முதல் நவம்பர் வரை சராசரியாக 50,000 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி முன் வைத்துள்ள புகார் தவறானது. அந்த கால கட்டத்தில் வெறும் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மட்டுமே 50,000-க்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டனர். எனவே, 47 தொகுதிகளில் மகாயுதி கூட்டணி பெற்ற வெற்றியின் மீது எப்படி கேள்வி எழுப்ப முடியும்.

அதுபோல, வாக்காளர் பட்டியலில் இருந்து வழக்கத்துக்கு மாறான வாக்காளர் நீக்கமும் மேற்கொள்ளப்படவில்லை. இறப்பு, முகவரி மாற்றம் காரணமாக இரு இடங்களில் பதிவு உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் சராசரியாக தொகுதிக்கு 2,779 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர் நீக்கம் செய்யும் பணியிலும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் இடம் பெற்றனர். இவ்வாறு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து