முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜன. 3-ல் வைகோ தலைமையில் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 25 டிசம்பர் 2024      தமிழகம்
Vaiko 2023 05 01

சென்னை, டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன. 3ம் தேதி மேலூரில் தனது தலைமையில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் கீழ் இயங்கும் கனிமம் மற்றும் சுரங்கம் அமைச்சகம் கனிம வளங்களை எடுப்பதற்காக நாடு தழுவிய அளவில் ஏலம் விட்டிருந்தது. கடந்த நவம்பர் 7 ஆம் தேதி கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் 7ஆவது ஏலம் நடத்தப்பட்டது. அதில் மேலூர், நாயக்கர்பட்டியில் உள்ள டங்ஸ்டன் கனிமத்தைத் தோண்டி எடுப்பதற்கு 5,000 ஏக்கர் பரப்பளவில் சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன்படி மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் டங்ஸ்டன் என்னும் கனிமவளங்கள் வெட்டி எடுப்பதற்கு வேதாந்தா குழுமத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அரிட்டாபட்டி கிராமத்தை 5000 ஏக்கர் (193.215 ஹெக்டேர்) பரப்பளவில் பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த கிராமத்தைச் சுற்றி ஏழு சிறிய குன்றுகள் உள்ளன. 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக இப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்களும் உள்ளன. விவசாயத்தினை அடிப்படையான கொண்ட பகுதியாகவும் உள்ளது. மேற்கண்ட குளம், ஏரி மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள தீர்மானத்தை மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொண்டு, உடனடியாக வேதாந்தா குழுமத்திற்கு வழங்கியுள்ள டங்ஸ்டன் கனிம வள சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்து, இத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி 2025 ஜனவரி 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு மதுரை மாவட்டம், மேலூர் பேருந்து நிலையம் அருகில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் எனது தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மதுரை மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வர்த்தகர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து ப் பிரிவினரும் கலந்து கொண்டு உரிமைக்குரல் எழுப்ப வாரீர் வாரீர் என்று தமிழ்நாட்டிற்கு ஊழியம் செய்பவன் என்ற முறையில் அழைப்பு விடுக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து