முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

228-வது நினைவு தினம்: வேலுநாச்சியார் உருவப்படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை

புதன்கிழமை, 25 டிசம்பர் 2024      தமிழகம்
Vijay-2024-12-25

சென்னை, வேலுநாச்சியாரின் 228-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு முதன் முதலில் சுதந்திரப் போராட்டத்தை தொடங்கி மீண்டும் தனது நாட்டை பிடித்த முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியாரின் 228-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது.

இந்த நிலையில், ராணி வேலு நாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் விஜய் மரியாதை செலுத்தினார்.

இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்த வீரப் புரட்சியாளர், இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி, அனைத்துச் சமூகத்தினரோடும் நல்லிணக்கத்தோடு நாடாண்ட தமிழச்சி, எம் கழகத்தின் கொள்கைத் தலைவர், வீரமங்கை, ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து