முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் அலைமோதும் கூட்டம்: கடந்த ஆண்டை விட 4 லட்சம் பேர் இதுவரை அதிக தரிசனம்

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2024      ஆன்மிகம்
sabarmala 2024-12-2

Source: provided

திருவனந்தபுரம் : சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த ஆண்டை விட 4 லட்சம் பேர் இதுவரை அதிகமாக தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஒரு லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயில் இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு சீசனில் பக்தர்கள் சபரிமலையில் 24 முதல் 36 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தததால் மிகவும் சிரமப்பட்டனர். இதற்கு பல்வேறு மாநில அரசுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு கேரள அரசு முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தியது. குறிப்பாக, 18 படிகளில் பக்தர்களை ஏற்றுவதை வேகப்படுத்தப்பட்டது. இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற போலீசார் நியமிக்கப்பட்டனர்.

அதேபோல் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. இதனால் நடப்பு சீசனில் பெரிய அளவிலான புகார்கள் இல்லாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டில் மட்டும் சபரிமலையில் 30 லட்சத்து 78 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். மண்டல காலத்தில் முதன்முறையாக இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். ஸ்பாட் புக்கிங் என்ற உடனடி முன்பதிவு மூலம் நேற்று முன்தினம் மட்டும் 22,769 பக்தர்கள் வந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு 4.45 லட்சம் பேர் அதிகமாக சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 22 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து