முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் ஒடிசாவில் யானை சடலமாக மீட்பு

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      இந்தியா
Elebent 2024-01-17

Source: provided

ஒடிசா : ஒடிசாவில் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் யானை சடலம் மீட்கப்பட்டது.

ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் ஆண் யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அங்குல் மாவட்டத்திலுள்ள போக்குண்டா வனப்பகுதியில் நேற்று முன்தினம் காலை 3 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானையின் சடலமொன்று கண்டுப்பிடிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட வனத்துறை அதிகாரிகள் யானை கொல்லப்பட்டதிற்கான காரணாம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது, கடந்த சனிக்கிழமை இரவு அந்த யானையை வேட்டைக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளதாகவும், ஆனால் அந்த யானையின் தந்தங்கள் அகற்றப்படாமல் இருப்பதினால் அதனை எதற்காக அவர்கள் வேட்டையாடினார்கள் என்ற காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றாக வளர்த தந்தங்களை உடைய அந்த ஆண் யானையின் தலையில் மூன்று முறை துப்பாக்கியால் சுடப்பட்டு அது கொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று அந்த யானையின் உடலை வனத்துறை மருத்துவர்கள் உடற்கூராய்வு சோதனை செய்யவுள்ளனர். தற்போது வரையில் அந்த யானை கொல்லப்பட்டதற்கு தொடர்பாக யாரும் கைது செய்யப்படாத நிலையில், வனத்துறை அதிகாரிகள் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவேண்டும் எனவும் இதுப்போன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராமல் பாதுகாக்க வேண்டும் எனவும் வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து