முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல்வியால் மிகுந்த ஏமாற்றம்: கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

Source: provided

மெல்போர்ன் : மனதளவில் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

பின்தங்கியது...

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா, மனதளவில் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பதாகவும், அணியின் பிரச்னைகளை தவிர்த்து தனிப்பட்ட முறையில் உள்ள பிரச்னைகளுக்கும் தீர்வு காண விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

சாதகமாக இல்லை...

இது தொடர்பாக அவர் பேசியதாவது., நான் எந்த இடத்தில் நின்றேனோ, அதே இடத்தில்தான் இன்றும் நிற்கிறேன். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. உண்மையில், சில முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. அணியின் கேப்டனாக இந்தத் தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்தத் தோல்வி மனதளவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமன் செய்ய முடியும்...

ஒரு அணியாக நாங்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதேபோல, தனிப்பட்ட முறையில் எனது ஆட்டத்திலும் சில விஷயங்களை சரிசெய்ய வேண்டியுள்ளது. எங்களுக்கு இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கிறது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்ய முடியும். சிட்னியில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும் என்றார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

புரிந்து கொள்ள... 

இந்திய அணி ரிஷப் பந்த்திடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அவர் விளையாடும் விதம் குறித்து நாம் அனைவரும் பேசுவதைக் காட்டிலும், அவரே அதனை புரிந்துகொண்டு சரிசெய்வதற்கான வழியைக் கண்டறிய வேண்டும். ஆட்டத்தின் சூழலைக் கருத்தில் கொண்டு விளையாட வேண்டும். ரிஸ்க்கான ஷாட்டுக்கு முயற்சி செய்யும்போது, நாம் எதிரணியை ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறோம் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து