முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவடி இரட்டை கொலை : இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      தமிழகம்
Suicide 2023 04 29

Source: provided

சென்னை  ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம்  அடுத்தடுத்து அண்ணன்-தம்பி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட  சம்பவம் தொடர்பாக பட்டாபிராம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜெகநாதன்  சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் அருகே உள்ள ஆயில்சேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரெட்டைமலை சீனிவாசன் (வயது 27). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரது தம்பி ஸ்டாலின் (24). இவர்கள் 2 பேர் மீதும் போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஸ்டாலின், ஆயில்சேரி மெயின் ரோடு ஜங்ஷனில் வந்து கொண்டிருந்த  போது அங்கு வந்த மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில்  வீச்சரிவாளால் ஸ்டாலினை சரமாரியாக வெட்டி கொன்றது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது அதே பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் ஆயில்சேரி தனலட்சுமி நகர் அருகே உள்ள மாந்தோப்பில் ரெட்டைமலை சீனிவாசனும் படுகொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. 

ஆனால் ரெட்டைமலை சீனிவாசன் உடல் கிடந்த இடம் ஆவடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால் இதுகுறித்து ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து இரட்டை மலை சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ஸ்டாலின் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பட்டாபிராம் போலீசாரும், ரெட்டைமலை சீனிவாசன்  கொலை தொடர்பாக ஆவடி போலீசாரும் இரு வழக்குகள் பதிவு செய்து  குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன்  சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து