முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி. அணிக்கு பின்னடைவு: ஸ்டீவ் ஸ்மித் காயம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      விளையாட்டு
Stuv-Sumet 2024-01-13

Source: provided

கேன்பரா : இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு காயம் ஏற்படுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பாட் கம்மின்ஸ் விலகல்

ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜனவரி 29 ஆம் தேதி தொடங்கவுள்ளது. பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கணுக்கால் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்துக்கு காயம்

இலங்கைக்கு எதிரான தொடரில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பிக் பாஷ் தொடரில் விளையாடிவரும் ஸ்டீவ் ஸ்மித்துக்கு  3 நாட்களுக்கு முன் முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. பந்தினை எடுத்து எறிய முயற்சித்தபோது, அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இலங்கை டெஸ்ட் தொடருக்காக இந்த வாரத்தின் பிற்பகுதியில் துபாயில் பயிற்சியைத் தொடங்கவிருந்த அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது ஆஸ்திரேலிய அணியை கவலையடையச் செய்துள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் வருகிற ஜனவரி 29 ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து