முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குப்பையில் கிடந்த ஐபோன், தங்க செயினை மீட்ட தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      தமிழகம்
Phone

Source: provided

சென்னை : சென்னையில் குப்பையில் கிடந்த ஐபோன், தங்க செயினை மீட்ட தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சென்னை பெருங்குடி பகுதியில் உள்ள பொன்னப்பன் கிராஸ் தெருவில் பணிபுரியும் தூய்மை பணியாளர் சின்னம்மாள் என்பவர், குப்பையில் கிடந்த 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோனை கண்டுபிடித்தார். இது குறித்து அவர் தனது மேலதிகாரியிடம் தெரிவித்தார். ஐபோன் மொபைல் நம்பர் மூலம் அதன் உரிமையாளரான நீலா மணிகண்டனை கண்டுபிடித்து ஐபோன் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 8 கிராம் தங்க செயினை குப்பையில் இருந்து மீட்ட இருதயமரி என்ற தூய்மை பணியாளர், அதனை தனது மேலதிகாரியிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த தங்க செயின் கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. நேர்மையுடன் செயல்பட்ட 2 தூய்மை பணியாளர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து