எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பாசிசத் தன்மை கொண்டதாக மாறி வருகிறது என்று தி.மு.க. அரசு மீது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் வழுதரெட்டியில் அமைக்கப்பட்டுள்ள வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயித்தியாகம் செய்த ஈகியர்களின் மணிமண்டபத் திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிபடையில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதுமட்டுமின்றி, அதில் பங்கேற்ற ஈகியர்களின் குடும்பத்தினர் இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கை மனுவைக் கூட முதல்வரிடம் அளிக்க விடாமல் அதிகாரிகளால் தடுக்கப்பட்டிருக்கின்றனர். தி.மு.க. அரசின் இந்த சமூக அநீதி நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த 21 ஈகியர்களுக்கு விழுப்புரம் வழுதரெட்டியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் திறப்பு விழா நேற்று காலை நடத்தப்பட்ட நிலையில், அதில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் மதியமே அழைத்து செல்லப்பட்ட 21 ஈகியர்களின் குடும்பத்தினர், கிட்டத்தட்ட பிணைக்கைதிகளைப் போல நடத்தப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பிற்பகலில் மணிமண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களுக்கு மணிமண்டப திறப்பு விழாவின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து மாவட்ட உதவி ஆட்சியர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் என்ற அதிகாரியால் பாடம் நடத்தப்பட்டிருக்கிறது.
அப்போது ஊடகங்களுடனோ, வேறு யாருடனோ பேசக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் தங்களின் நோக்கம் என்றும், அதற்கான கோரிக்கை மனுவை முதல்வரிடம் வழங்க வேண்டும் என்று தியாகிகளின் குடும்பத்தினர் கேட்ட போது, அது போன்று எந்த மனுவையும் தரக்கூடாது என்று அவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். அதையும் மீறி, நேற்று காலை முதல்வரிடம் வழங்குவதற்காக ஈகியர் குடும்பத்தினர் மனுக்களை எடுத்துச் சென்ற போது, அவை அனைத்தையும் விழா நடைபெறும் இடத்தில் இருந்த மாவட்ட உதவி ஆட்சியர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் தலைமையிலான குழுவினர் பறித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஈகியர்களின் மணிமண்டபத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ஈகியர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்து முறையிட்ட போது, அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் சென்று விட்டதாகவும் ஈகியர் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். வன்னியர் இட ஒதுக்கீட்டு கோரிக்கை குறித்த மனுக்களைக் கூட பெற முடியாத அளவுக்கும், அவர்களின் கோரிக்கைகளை முதல்-அமைச்சர் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கும் தி.மு.க. அரசு பாசிசத் தன்மை கொண்டதாக மாறி வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்ற வன்னியர்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் எவ்வளவு தான் முட்டுக்கட்டைகளைப் போட்டாலும், அவை அனைத்தையும் முறியடித்து வன்னியர்களுக்கான சமூகநீதியை மருத்துவர் ராமதாஸ் வென்றெடுத்துக் கொடுப்பார். அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தும் கூட வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தி.மு.க. அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 2 days ago |
-
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 25-ஆக உயர்வு : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
29 Jan 2025சென்னை : அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
3-வது டி-20யில் இங்கிலாந்து வெற்றி: தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் : தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
29 Jan 2025ராஜ்கோட் : 3-வது டி-20யில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து தெரிவித்துள
-
கலைஞர் கனவு இல்லம் திட்டம்: மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
29 Jan 2025சென்னை : வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
ஆசிய காது கேளாதோர் போட்டியில் பதக்கம்: தமிழ்நாடு வீரர் வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு
29 Jan 2025சென்னை : ஆசிய காது கேளாதோர் போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
29 Jan 2025சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிராம் ரூ.7,595க்கும், ஒரு சவரன் ரூ.60,760க்கும் விற்பனையானது.
-
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு தோல்வி நிச்சயம் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேட்டி
29 Jan 2025புதுடெல்லி : டெல்லி சட்டசபை தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவால், அதிஷி இருவருக்கும் தோல்வி நிச்சயம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.
-
வரும் 6-ம் தேதி திருநெல்வேலி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
29 Jan 2025நெல்லை : வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் நெல்லைச் சீமைக்கு வருகிறேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தொடர்ந்து கடும் விமர்சனம்: கவாஸ்கர் மீது பி.சி.சி.ஐ.யிடம் புகார் அளித்த ரோகித் சர்மா
29 Jan 2025மும்பை : இந்திய முன்னாள் வீரர் ஒருவர் மீது பி.சி.சி.ஐ.-யிடம் ரோகித் சர்மா புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஸ்டீவ் ஸ்மித் 35-வது சதம்
29 Jan 2025வார்னே - முரளிதரன் டிராபியில் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் காலேயில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
-
பிப். 1 முதல் ஓலா, உபர் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்
29 Jan 2025சென்னை : ஓலா, உபர் நிறுவனங்களுக்காக ஆட்டோ ஓட்டமால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
-
1,250 கிராமப்புற கோவில்களின் திருப்பணிக்கு ரூ.62.50 கோடி நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
29 Jan 2025சென்னை : 1,250 ஆதிதிராவிடர் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ளவதற்காக உயர்த்தப்பட்ட நிதியுதவி தலா ரூ.2.50 லட்சம் வீதம் மொத்தம
-
தமிழகத்தில் ஜி.பி.எஸ். நோய் பாதிப்பா? - அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்
29 Jan 2025சென்னை, : மகாராஷ்டிரத்தில் காணப்படக்கூடிய ஜிபிஎஸ் நோய் பாதிப்பு தமிழ்நாட்டில் வருவதற்கு வாய்ப்பில்லை.
-
ஜாமீன் வழங்கும்போது நிபந்தனை: விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்
29 Jan 2025சென்னை : ஜாமீன் வழங்கும்போது எளிதில் நிறைவேற்றக் கூடிய நிபந்தனை விதிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-01-2025.
30 Jan 2025 -
ஐ.சி.சி. டி-20 தரவரிசை: 2-ம் இடத்தில் திலக்வர்மா
29 Jan 2025துபாய் : ஐ.சி.சி. டி20 தரவரிசையில் இந்திய வீரர்களான திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி முன்னேறியுள்ளார்கள்.
25 இடங்கள்...
-
தை அமாவாசையையொட்டி திருச்செந்தூர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
29 Jan 2025திருச்செந்தூர் : தை அமாவாசையையொட்டி திருச்செந்தூர் கடற்கரையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
-
ம.நீ.ம. கட்சியில் இருந்து நடிகை வினோதினி விலகல்
30 Jan 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பிரபல நடிகை வினோதினி விலகியுள்ளார்.
-
மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடிய வாலிபர்கள் கைது
30 Jan 2025மதுரை, மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் இருந்து செல்போன்களை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
-
சமூக ஆர்வலர் கொலை வழக்கு: ஐகோர்ட் கிளை முக்கிய உத்தரவு
30 Jan 2025மதுரை, ஜகபர் அலிகான் உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய சென்னை உயர் நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
இலங்கை சிறையில் இருந்து விடுதலை 6 மீனவர்கள் சென்னை திரும்பினர்
30 Jan 2025சென்னை, இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 6 ராமேசுவரம் மீனவர்கள் சென்னை திரும்பியுள்ளனர்.
-
கட்டுப்பாட்டை இழந்து லாரி ஏரியில் கவிழ்ந்து விபத்து: தண்ணீரில் மிதந்த சிலிண்டர்கள்
30 Jan 2025திருவண்ணாமலை, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சிலிண்டர் லாரி ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிலிண்டர்கள் ஏரியில் மிதந்தன.
-
மகா கும்பமேளாவில் வி.வி.ஐ.பி. பாஸ்கள் ரத்து: யோகி ஆதித்யநாத்
30 Jan 2025பிரயாக்ராஜ், மகா கும்பமேளாவில் முக்கிய பிரபலங்களுக்கான சிறப்பு பாஸ் வழங்குவதை ரத்து செய்யும்படி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
-
அமித்ஷா குறித்து சர்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
30 Jan 2025சுல்தான்பூர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
காந்தியின் லட்சியங்கள் உத்வேகம் அளிக்கிறது: நினைவுநாளில் பிரதமர் புகழாரம்
30 Jan 2025புதுடில்லி, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க காந்தியின் லட்சியங்கள் நமக்கு உத்வேகம் அளிக்கிறது என அவரது நினைவு தினத்தில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
-
திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம்
30 Jan 2025பீஜிங், திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.