முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகாலயாவுக்கு எதிரான ரஞ்சி போட்டி: ரோகித் சர்மா இடம்பெறவில்லை

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      விளையாட்டு
Rohit-Sharma 2023 08-07

Source: provided

மும்பை : ரஞ்சி கோப்பை தொடரில் அடுத்து விளையாடவுள்ள  போட்டிக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரோகித் சர்மா  இடம்பெறவில்லை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகவும் முக்கியமான போட்டியில் மேகாலயாவை எதிர்த்து நடப்பு சாம்பியனான மும்பை அணி விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி நாளை  (ஜனவரி 30) மும்பையில் தொடங்கவுள்ளது.

ரோகித் சர்மா இல்லை

சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள மேகாலயாவுக்கு எதிராக மிகவும் முக்கியமான போட்டியில் விளையாடவுள்ள நிலையில், அப்போட்டிக்கான மும்பை அணி  நேற்று (ஜனவரி 28) அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட இந்த அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெறவில்லை. அங்க்ரிஷ் ரகுவன்ஷி, சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் அதர்வா அங்கோல்கர் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து தொடருக்காக

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் வருகிற பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதால், மும்பை அணியில் ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெறவில்லை. இவர்கள் மூவரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

வெற்றி கட்டாயம்

ஜம்மு - காஷ்மீருக்கு எதிரான கடந்த போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்ததால், மேகாலயாவுக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் நடப்பு சாம்பியனான மும்பை அணி உள்ளது. புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேற மேகாலயாவுக்கு எதிரான போட்டியில் மிகப் பெரிய வெற்றியை போனஸ் புள்ளிகளுடன் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மும்பை உள்ளது. அதேவேளையில், ஏ பிரிவில் புள்ளிப்பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் பரோடா அணி, அதன் அடுத்த போட்டியில் ஜம்மு - காஷ்மீரிடம் தோல்வியடைய வேண்டும்.

மும்பை அணி விவரம்

அஜிங்கியா ரஹானே (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, அங்க்ரிஷ் ரகுவன்ஷி, அமோக் பட்கால், சித்தேஷ் லாட், ஆகாஷ் ஆனந்த், ஹார்திக் தமோர், சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஷர்துல் தாக்குர், ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியான், மோஹித் அவஸ்தி, சில்வஸ்டர் டிசௌசா, ராய்ஸ்டன் டையஸ், ஸ்ரேயாஸ் கௌரவ் மற்றும் அதர்வா அங்கோல்கர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து