முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2025      தமிழகம்
Cylinder 2023 07 01

Source: provided

புதுடெல்லி : வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்து விறப்னை செய்யப்பட்டது.

நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முதல் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் ரூ.7 விலை குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விலையின்படி, புதுடெல்லியில் வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.1,797-க்கும், கொல்கத்தாவில் ரூ.1,907-க்கும், மும்பையில் ரூ.1,749-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் ரூ.6.50 குறைந்து ரூ.1959.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எனினும் வீட்டு பயன்பாட்டுக்கான 14.2 கிலோ சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50-க்கு விற்பனையாகிறது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எல்.பி.ஜி. சிலிண்டர் டெல்லியில் ரூ.803, சென்னையில் ரூ.818.50 ஆக உள்ளது. மும்பையில் ரூ.802.50, கொல்கத்தாவில் ரூ.829 என்றளவில் விற்பனையாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து