முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணல் குவாரிகளை திறக்க அ.தி.மு.க. அனுமதிக்காது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2025      தமிழகம்
Jayakumar 2023 04 15

Source: provided

சென்னை : தமிழக அரசு 13 மணல் குவாரிகளை திறக்க அனுமதிக்கமாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க. பொதுச்​செயலாளர் பழனிசாமி, சென்னை, புறநகர் மாவட்டங்களில் நடைபெற உள்ள களஆய்வு பணிகள் குறித்து, மாவட்ட செயலா​ளர்களுடன் சென்னையில் நேற்றுமுன்தினம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:- தமிழகத்தில் தற்போது 13 மணல் குவாரிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. 

இதன்​மூலம் தமிழகத்தை பாலை​வனமாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. குவாரி மூலம் ஆதாயம் பெற வேண்டும், ஊழல் செய்ய வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்பதே தி.மு.க. அரசின் நோக்கமாக உள்ளது. மணல் குவாரிகளை திறக்கவிட மாட்டோம். மீறி திறந்தால், மக்களை திரட்டி போராட்டம் நடத்து​வோம். நாட்டில் விலை​வாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்​கேடு, பாலியல் வன்கொடுமை விவகாரம் இப்படி எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. அதை பற்றி பேசாமல் பெரியார் குறித்து சீமான் பேசுவது மக்களை திசை திருப்பும் செயல்.

கிழக்கு கடற்கரை சாலை விவகாரத்​தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். இவ்​வாறு அவர் கூறினார்​. மாவட்ட செயலாளர்களை தனித்தனியே அழைத்து விவாதித்த பழனிசாமி, தொகுதிகளில் அ.தி.மு.க.வின் பலம் மற்றும் பலவீனம் குறித்து கேட்டறிந்தார். அப்போது கட்சியில் இளைஞர்கள் அதிக அளவில் சேர்த்தால் தான் கட்சி வளரும். அதே நேரத்தில், அவர்களின் குற்றப் பின்னணி குறித்து ஆராய்ந்த பின்னரே கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து