முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழர்களின் நிலம் திரும்ப அவர்களிடம் ஒப்படைப்பு : அதிபர் திசநாயகா உறுதி

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2025      உலகம்
Sri-Lanka 2024-11-11

Source: provided

கொழும்பு : இலங்கை ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்று அந்த நாட்டு அதிபர் திசநாயகா உறுதி அளித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் மற்றும் சிங்கள ராணுவத்துக்கு இடையேயான உள்நாட்டு போர் தொடங்கிய 1980-களில் இருந்து அரசாங்கம் தமிழ் மக்களின் நிலங்களை ராணுவ நோக்கத்துக்காக கையகப்படுத்தியது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் நகரில் 3,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை அரசு கையகப்படுத்தியது. 2009-ல் போர் முடிவுக்கு வந்த பிறகு 2015 முதல் கையகப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சில நிலங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. எனினும் தமிழ் மக்களுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னும் அரசு வசமே உள்ளது.

இந்த நிலையில் இலங்கை அதிபராக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக அனுரா குமார திசநாயகா நேற்று யாழ்ப்பாணம் நகருக்கு சென்றார். அங்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் பல்வேறு பிரதிநிதிகளுடன், யாழ்ப்பாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது அவர் ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திருப்பித் தரப்படும் என்று உறுதியளித்தார். நிலங்களை ஒப்படைக்கும் செயல்முறையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து