முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலெக்டர்கள் முதல்வரிடம் வாழ்த்து

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2025      தமிழகம்
Stalin 2024-11-26

Source: provided

சென்னை: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்கள் சென்னை தலைமையகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க. ஸ்டாலினை  தலைமைச் செயலகத்தில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்களான ஆர். சதீஷ் (தருமபுரி), எஸ். சரவணன் (திண்டுக்கல்),  எம். பிரதாப் (திருவள்ளூர்), சி. தினேஷ் குமார் (கிருஷ்ணகிரி), எஸ். சேக் அப்துல் ரகுமான் (விழுப்புரம்), கே. தர்பகராஜ் (திருவண்ணாமலை), வி. மோகனசந்திரன் (திருப்பத்தூர்), டாக்டர் ஆர். சுகுமார் (திருநெல்வேலி),  கே. சிவசவுந்தரவள்ளி (திருவாரூர்) ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாடு முதல்வர் புதிய மாவட்ட கலெக்டர்களிடம் உரையாற்றிய போது, இன்று (நேற்று) முதல் மக்களுடன் நேரடி தொடர்பில் களத்தில் இருக்கப் போகும் நீங்கள், அரசின் முத்திரை திட்டங்கள், அன்றாடம் செயல்படுத்தும் திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள், இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டிய திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அரசு அலுவலகங்களுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், மக்கள் குறை தீர்ப்பு முகாம் மனுக்கள் மீதும், முதல்வரின் முகவரி மனுக்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தி, தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து கொண்டு, அவர்களின் குறைகளை அங்கேயே தீர்த்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசித்து தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பொதுத்துறை செயலாளர்   ரீட்டா ஹரீஷ் தக்கர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து