முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் 50 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடில்லி: நாட்டின் சிறந்த 50 சுற்றுலாத் தலங்கள் மாநிலங்களுடன் இணைந்து மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நடப்பாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.  

 அதில், சுற்றுலாத் தலங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மாநிலங்களுடன் இணைந்து நாட்டின் முதல் 50 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும். முத்ரா கடன்கள் நீட்டிப்பு மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும்.

அத்தியாவசிய உள்கட்டமைப்பை உருவாக்க நிலம் வழங்குவதற்கு மாநில அரசுகள் பொறுப்பாகும். சுற்றுலாவை மேலும் மேம்படுத்த, முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள் உள்கட்டமைப்பு பட்டியலில் சேர்க்கப்படும். விருந்தோம்பல் மேலாண்மை நிறுவனங்கள் உள்பட நமது இளைஞர்களுக்கான தீவிர திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் வேலைவாய்ப்பு சார்ந்த வளர்ச்சியை எளிதாக்குவோம்

சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா குழுக்களுக்கு அரசு நெறிப்படுத்தப்பட்ட இ-விசா வசதிகள் மற்றும் விசா கட்டண தள்ளுபடிகளையும் அறிமுகப்படுத்தும் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து