முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு ரெயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி ஒதுக்கீடு : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      இந்தியா
Ashwini-Vaishnav 1

Source: provided

புதுடெல்லி : பட்ஜெட்டில் தமிழ்நாடு ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கர்நாடக மாநிலத்திற்கு ரூ.7,564 கோடி ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு 97 சதவீதம் ரயில் வழித்தடங்கள் மின்மயம் ஆக்கப்பட்டுள்ளது. விரைவில் முழுவதும் மின்மயமாக்கப்படும். கேரளா மாநிலத்தில் ரூ. 3,042 கோடி ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ரெயில்வே திட்டங்களுக்கு 2025-26 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.2,948 கோடி மதிப்பீட்டில் 77 ரெயில் நிலையங்களின் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. மொத்தமாக 2,587 கி.மீ நீளத்திற்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியை விட பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 50 நமோ பாரத் புதிய ரெயில்கள் இயக்க இந்த பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய ரெயில்கள் மற்றும் கூடுதல் பெட்டிகள் தெற்கு ரெயில்வேயில் இணைக்கப்பட உள்ளது.

பாம்பன் ரெயில்வே பாலம் ஒரு தனித்துவமானது. பாம்பன் பாலத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது; பாலம் திறக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தனுஷ்கோடி ரெயில்வே திட்டம் மத்திய அரசு தரப்பில் உயிர்ப்புடன் தான் உள்ளது. ஆனால், மாநில அரசு தரப்பில் அதனை செயல்படுத்த விருப்பப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து