முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்ப நலன்தான் அவர்களுக்கு முக்கியம்: அனைவருக்கும் வளர்ச்சி என்பதை காங்கிரசிடம் எதிர்பார்க்க முடியாது: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      இந்தியா
Modi -2024-07-02

புதுடெல்லி, குடும்ப நலன்தான் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியம் என்று மாநிலங்களவையில் தெரிவித்த பிரதமர் மோடி, அனைவருக்கும் வளர்ச்சி என்பதை  காங்கிரஸிடம் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு கை விலங்கிடப்பட்ட விவகாரம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடுகடத்தல் முறை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரியதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் "மனிதாபிமானமற்ற முறையில்" நாடு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனிடையே மத்திய மந்திரி ஜெய்சங்கர் இந்த விவகாரம் குறித்து நேற்று பிற்பகல் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் நாடு கடத்தப்பட்ட சம்பவம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தனது பதிலுரையை வழங்கி அவர் பேசியதாவது:- குடியரசுத் தலைவர் உரை மிகவும் சிறப்பாக இருந்தது. அனைவருக்குமானதாக இருந்தது. அனைவருக்கும் வளர்ச்சி என்பதை சிலரால் புரிந்துகொள்ளவும் முடியாது; ஏற்றுக்கொள்ளவும் முடியாது. குடும்ப நலனே முக்கியம் என்பது காங்கிரஸ் கட்சியின் மாடல். நாட்டின் நலனுக்கு முன்னுரிமை என்பதே எங்கள் (பாஜக) மாடல். மக்கள் எங்கள் மாடலின் வளர்ச்சியை பரிசோதித்து புரிந்துகொண்டு ஆதரவு அளித்துள்ளனர். வளர்ச்சி மீதான நம்பிக்கையால்தான் மக்கள் எங்களை 3வது முறையாகத் தேர்வு செய்துள்ளனர்.

இரு அவைகளிலும் மகளிருக்கு இடஒதுக்கீடு தந்தது பாஜக அரசுதான். புதிய பாராளுமன்றத்தில் முதல் நடவடிக்கையாக மகளிருக்கான இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.  அனைவருக்கும் வளர்ச்சி என்பதை காங்கிரஸ் கட்சியிடம் எதிர்பார்க்க முடியாது. அது மிகப்பெரிய தவறு. அவர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. ஏனெனில் அவர்களின் பாதை ஒற்றைக் குடும்பத்தின் நலனை நோக்கியே உள்ளது.

அம்பேத்கரின் நடவடிக்கைக்கு எதிராகச் செயல்பட்டது காங்கிரஸ் கட்சி. 2 முறை அம்பேத்கரை தேர்தலில் தோல்வி அடையச் செய்ய அனைத்துப் பணிகளையும் காங்கிரஸ் செய்தது. அம்பேத்கருக்கு சமுதாயம் அளித்த அங்கீகாரத்தால் தற்போது ஜெய்பீம் என காங்கிரஸ் கட்சியினர் முழங்குகின்றனர். மற்றவர்களை பலவீனப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபடுகிறது. இதனால்தான் கூட்டணி கட்சியினர் கூட காங்கிரஸ் கட்சி உடனான உறவை முறித்துக்கொண்டு விலகுகின்றனர். மற்றவர்களை பலவீனப்படுத்துவதை விட்டு, உங்கள் (காங்கிரஸ்) கட்சியை பலப்படுத்துங்கள். அப்படிச் செய்தால் எப்போதாவது மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து