முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறிமுக போட்டியில் அதிக விக்கெட்டுகள் ஹர்ஷித் ராணா புதிய சாதனை

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      விளையாட்டு
Harshit-Rana--2025-02-06

நாக்பூர், 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமான முதல் போட்டியிலேயே  அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஹர்ஷித் ராணா சாதனை  படைத்துள்ளார்.

ஒருநாள் தொடர்... 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. அடுத்ததாக ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. அதன்படி இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.

249 ரன்கள் இலக்கு...

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

அறிமுக போட்டியில்...

முன்னதாக இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா, கடந்த வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். அறிமுகம் ஆன முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பின்னர் சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் 4-வது போட்டியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அந்த போட்டியிலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து தற்போது அறிமுகம் ஆன முதல் ஒருநாள் போட்டியிலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

சாதனை... 

இதன் மூலம் 3 வடிவிலான போட்டிகளிலும் (டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட்) அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே 3 அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை ஹர்ஷித் ராணா படைத்துள்ளார்.  இதற்கு முன் எந்த ஒரு இந்திய வீரரும் இப்படியொரு சாதனையை படைத்திராதது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து