முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி? கேப்டன் ரோகித் சர்மா பதில்

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

Source: provided

நாக்பூர்: சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.

ஒரு நாள் தொடரில்... 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

சாம்பியன்ஸ் டிராபியில்...

முன்னதாக டி20 தொடரில் மொத்தம் 14 விக்கெட்டுகள் கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி கடைசி நேரத்தில் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இதன் காரணமாக எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிந்திக்கவில்லை...

இந்நிலையில் முதல் போட்டிக்கு முன்னதாக நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வருண் சக்ரவர்த்தி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறுவது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோகித் கூறுகையில், "வருண் சக்ரவர்த்தி ஏதோ ஒரு வித்தியாசமான விஷயத்தை அவருக்குள் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே நாங்கள் எங்களால் என்ன செய்ய முடியும் என்று நான் பார்க்கிறோம்.  தற்போது நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை பற்றி சிந்திக்கவில்லை. ஒருவேளை வருண் இங்கு நன்றாக விளையாடினால் பின்னர் நாங்கள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும்" என்று கூறினார்.

காலில் காயம்...

முன்னதாக இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், நாகபுரியில் தொடங்கியது.  இந்த போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை இது குறித்து ரோஹித் சர்மா, “புதன்கிழமை நடைபெற்ற பயிற்சியின்போது விராட் கோலிக்கு வலது முட்டியில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் விளையாடவில்லை” என டாஸின்போது தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்கவில்லை...

காயம் பெரியதாக இல்லை அடுத்த போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்திய அணி இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. அவருக்குப் பதிலாக அணியில் ஹார்திக் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 295 போட்டிகளில் 13,906 ரன்கள் குவித்துள்ளார். இதில் 50 சதங்கள், 72 அரைசதங்கள் அடங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து