முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி: டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாரதிய ஜனதா கட்சி

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2025      இந்தியா
BJP 2024-03-05

Source: provided

புதுடெல்லி: 26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களைக் கைப்பற்றும் நிலையில் இருக்கிறது அக்கட்சி. அதேவேளையில், வெறும் 22 தொகுதிகளை மட்டும் வசமாக்கவுள்ள ஆம் ஆத்மி ஆட்சியை இழக்கிறது. முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் தோல்வியைத் தழுவினார்.

கருத்துக்கணிப்பு...

டெல்லியில் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 60.42 சதவீத வாக்குகள் பதிவாகின. டெல்லி பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. 70 தொகுதிகளில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களம் கண்டனர். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்துமே பா.ஜ.க வெற்றி பெறும் என்றே கூறியிருந்தன.

ஆரம்பம் முதலே... 

இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. 19 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே பா.ஜ.க நிலையான ஆதிக்கத்தை செலுத்தியது. மொத்தம் பா.ஜ.க, 48 இடங்களை வசப்படுத்துகிறது. அமோக வெற்றி பெற்றதை அடுத்து டெல்லி பா.ஜ.க அலுவலகம் கொண்டாட்டங்களால் களை கட்டியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

சிசோடியா தோல்வி... 

மணீஷ் சிசோடியா ஜங்புரா தொகுதியில் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தனது தோல்வி குறித்து அவர், "கட்சித் தொண்டர்கள் சிறப்பாகப் போராடினர். நாங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தோம். மக்களும் எங்களை ஆதரித்துள்ளனர். ஆனால், நான் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தேன். வெற்றி பெற்ற வேட்பாளரை நான் வாழ்த்துகிறேன். அவர் தொகுதிக்காக உழைப்பார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

26 ஆண்டுகளுக்கு...

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க 48 இடங்களை வசப்படுத்துகிறது. வெற்றிக்கு 36 தொகுதிகள் போதுமென்ற நிலையில் மாபெரும் வெற்றியை நோக்கி பா.ஜ.க முன்னேறி வருகிறது. இதனால், டெல்லி பா.ஜ.க அலுவலகம் உற்சாகமாகக் காணப்படுகிறது. 26 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது அக்கட்சியினரை கொண்டாட்ட மனநிலையில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து