முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகண்ட் பனிச்சரிவு பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

டெஹ்ராடூன்: உத்தரகண்டில் பணிச்சரிவில் காணாமல் போன மேலும் ஒருவரின் உடல் ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் மூலம் பனிச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. 

உத்தரகண்டில் இந்திய-திபெத் எல்லையையொட்டி 3,200 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள கடைக்கோடி கிராமம் மனா.  பத்ரிநாத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக, மனா மற்றும் பத்ரிநாத் இடையே அமைந்துள்ள பி.ஆா்.ஓ. முகாம் பனிச்சரிவில் புதைந்தது. இந்த முகாமில் 8 கண்டெய்னா்கள் மற்றும் கூடாரத்தில் தங்கியபடி, சாலையில் படியும் பனியை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவந்த 55 தொழிலாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை பனிச்சரிவில் சிக்கினா். 

சம்பவ இடத்துக்கு விரைந்த ராணுவம் மற்றும் இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐ.டி.பி.பி.) வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். கடும் பனிப்பொழிவு, கனமழைக்கு இடையே  மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் 50 போ் காயங்களுடன்  மீட்கப்பட்டனா். இந்த விபத்தில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போன எஞ்சிய 3 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இன்று மீட்கப்பட்ட உடல் டெஹ்ராடூன் கொண்டு செல்லப்படுகிறது.

ராணுவம், விமானப்படை, என்.டி.ஆர்.எப்., எஸ்.டி.ஆர்.எப். உள்ளிட்ட பல படைகள் இணைந்து காணாமல் போன தொழிலாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று தெரிவித்தார்.

காணாமல் போன தொழிலாளர்களைக் கண்டறிய தரையில் ஊடுருவக்கூடிய ரேடார், தெர்மல் இமேஜிங் கேமராக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் கூறினார். அப்பகுதியில் வானிலை மேம்பட்டு வருவதாகவும், ஆனால் பனிச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து